style="text-align: center;">2ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி
2956
வைகுந்தாமணிவண்ணனே என்பொல்லாத்திருக்குறளா என்னுள்மன்னி
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1
2957
சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய் எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 2.6.2
2958
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 2.6.3
2959
வள்ளலேமதுசூதனா என்மரகதமலையே உனைநினைந்து
தெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4
2960
உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை
சிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே. 2.6.5
2961
உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்டஎன்
முன்னைகோளரியே முடியாததென்னெனக்கே?. 2.6.6
2962
முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்உகந்துவந்
தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 2.6.7
2963
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 2.6.8
2964
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா
கொந்தார்தண்ணந்துழாயினாய் அமுதேஉன்னையென்னுள்ளேகுழைத்த
மைந்தா வானேறே இனியெங்குப்போகின்றதே? 2.6.9
2965
போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள் தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10
2966
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங்
கண்ணனை புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 2.6.11