திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

2ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி

2923

ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று

வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்

தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்

தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1

 

2924

ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய

ஒத்தாயெப்பொருட்கு முயிராய் என்னைப்பெற்ற

அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த

அத்தா நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2

 

2925

அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து

அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்

அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று

அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3

 

2926

எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு

எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே

எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்

எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4

 

2927

இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்

கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே

தனியேன்வாழ்முதலே பொழிலேழுமேனமொன்றாய்

நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5

 

2928

சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை

தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை

சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்

கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6

 

2929

முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே

பன்னலார்பயிலும் பரனேபவித்திரனே

கன்னலேஅமுதே கார்முகிலேஎன்கண்ணா

நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7

 

2930

குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்

கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்

உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்

நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8

 

2931

கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்

படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்

செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி

அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9

 

2932

களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று

ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ

துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி

அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10

 

2933

குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை

குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த

குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி

குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11

Leave a Reply