682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரி விழா!
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், நவராத்ரியை முன்னிட்டு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பட்டிவீரன் பட்டி மாரியம்மன் கோயில், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் கோயில், வைகை காலனி, மேற்கு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நவராத்ரியை ஒட்டி, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், ஜெனி நாராயணப் பெருமாள், திரௌபதியம்மன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இன்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவேங்கடம் ஏடகநாதர் கோயில்களில் நவராத்ரி விழா வையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இல்லங்களில் நவராத்ரி கொலு:
மதுரை மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு வீடுகள்,கோயில்களில் சிறப்பாக கொழு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டி வீரன் பட்டி மாரியம்மன் ஆலயத்தில், திருப்பதி வேங்கடாசலபதி, பத்மாவதியராக காட்சி அளித்தார். சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அம்பாள் கடம்பவன வாசினி அலங்காரத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்திலும், சித்திவிநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயங்களிலும், நவராத்ரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் பகுதிகளில் உள்ள வ.உ.சி தெரு, வீரவாஞ்சி தெருக்களில் வீடுகளில் கொலு அலங்காரத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர்.