about us

செய்திகள்

50" height="80" border="0" />

தெய்வத் தமிழ் தளம் பற்றி …

தெய்வத்தமிழ்.காம் – தமிழ், ஆங்கிலம் என இருமொழி பயன்பாட்டு இணையத் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய பக்தி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புத் தளமாகத் திகழும் நோக்குடன் கலியுகாப்தம் 5109 / திருவள்ளுவராண்டு 2038-39 / கொல்லம் வருஷம் 1182-83 ஸர்வஜித் வருஷம் சித்திரைத் திங்கள் முதல் நாளில் (14.04.2007) தொடங்கப்பட்டது.

தெய்வத்தமிழ் டாட் காம் – உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கான தெய்வத் தமிழ் பிரசாரத் தளம்.

சமூகம் சார்ந்துதான் சமயம் இருக்கும். பக்தியும் மொழியுமே சமயத்தை நிலைநிறுத்தும்.

தொல்காப்பியர் காலம் முன்பிருந்து வந்திருக்கும் உண்மைத் தமிழர் மதமான நம் சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் தளம் இது.

இம்மண்ணிலிருந்துதான் சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் குருராகவேந்திரரும் பக்தியை உலகு முழுதும் பரவச் செய்தார்கள். இந்த மண் சார்ந்த சமூக அர்ப்பணிப்பு – இத்தளம்.

இந்தத் தளத்தில்…

# ஆழ்வார்கள், நாயன்மார்களின் வரலாறு, பாசுரங்கள், பதிகங்கள் உள்ளிட்ட தெய்வத்தமிழ்த் திருமுறைகள் இங்கே…

# தேவைப்படும் பாடல்களை அச்சு மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். (பதிவு செய்தவர்களுக்கு மட்டும்)

# பாடல்களுக்கான விளக்கக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்.

 

# மாணவர்கள் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெறும்.

# பாரத பாரம்பர்யக் கலைகள் குறித்த தெளிவுகள்…

# உண்மைத் தமிழரின் பாரம்பர்யத்தை விளக்கும் கட்டுரைகள்…

# அபூர்வமான ஆலயங்களின் தரிசனம் மற்றும் தகவல்கள்…

# ஆன்மிகப் பெரியவர்களின் ஆன்மநேயக் கட்டுரைகள்…

# நாட்டுப்பற்றை வளர்க்கும் தேசத்தியாகியரின் வாழ்க்கைச் சம்பவங்கள்… என இந்தத் தளத்தில் இடம்பெறச் செய்ய எண்ணுகிறோம்.

# ஆன்மிகச் செய்திகள், அன்றாடத் தகவல்கள் உடனுக்குடன்…

இந்தத் தளம் –

# தெய்வத் தமிழ் எழுத்தாளர்கள் – ஆன்மநேய வாசகர்கள் பங்கேற்கும் சிந்தனை மேடை!


 * * * தளம் மறு வடிவாக்கம் செய்யப்படுகிறது…

நண்பர்களே… வாசகர்களே… முன்னர் பிரபந்தம் தளமாக நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு மட்டுமான தளமாக இயங்கினோம். இப்போது நம் ஹிந்து மதத்தில் உட் பிரிவுகளாக விளங்கும் ஆறு சமயங்களுக்குமான தமிழ்த் தளமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பழைய தளத்தின் மாதிரியே இதில் உள்ளீடு செய்யப் பெற்றுள்ளது. சிறிது சிறிதாக மாற்றம் செய்யப் படும். தங்கள் ஆதரவுக்கு நன்றி!

தோள்கொடுங்கள்!

ஒருங்கிணைக்கும் முயற்சியில் தோள்கொடுங்கள்!

ஆலயங்கள், விழாக்கள், பண்டிகைகள், இல்லத்தில் இருந்தபடி ஆன்மிகப் பணியில் ஈடுபட அருமையான தோத்திரங்கள், சுலோகங்கள், பூஜை முறைகள் என அனைத்தையும் ஒருங்கே பதிய வைக்கும் ஒரு முயற்சி. வாசக அன்பர்கள் தாங்களும் இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.

வேண்டுகோள்:

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

மூவேந்தர் முடிமன்னர் ஆண்ட நம் தமிழ்நாடு பழைமையான ஆலயங்களுக்கு, பாரம்பரியத்துக்குச் சொந்தமான நாடு. இங்கே மன்னர்கள் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிக்கொண்டதை விட, இறைவனுக்கு ஆலயங்களை நிறுவுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் அமைத்த ஆலயங்கள் பல இன்று சிதிலமுற்று இருக்கின்றன. அவற்றைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு நம் தலைமுறைக்கு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் சிறு சிறு குழுக்களாக இயங்கும் உழவாரப் பணி மன்றங்கள், உழவாரத் தொண்டர்களின் விவரங்களைத் திரட்டி ஒருங்குபடுத்தும் எண்ணம் நம் தெய்வத்தமிழ் தளத்துக்கு உண்டு. வாசகர்கள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு தகவல்களை உள்ளிடுங்கள். நம் மதத்துக்கும், ஆலயங்களுக்கும் தொண்டர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வரவேற்கிறோம்..

வாசக அன்பர்களை வரவேற்கிறோம்..

நல்லவற்றை ஏற்கும் நல்ல உள்ளங்களை தெய்வத் தமிழ் தளத்துக்கு வரவேற்கிறோம்… வைணவம், சைவம் ஆகிய சமயம் தொடர்பான தகவல்கள், ஐயங்களுக்கான விளக்கங்கள், ஆலயங்களின் தகவல்கள், சமய இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், உங்களின் ஆன்மிக அனுபவங்கள், பூஜை முறைகள், தனிப்பட்ட வகையில் செய்யும் பூஜைகள், அடைந்த பலன்கள் என அனைத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். ஹிந்து ஆன்மிக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் நல்லுறவுத் தளம் இது. பிறர் மனதைக் காயப்படுத்தாத வாசகர் எண்ணங்களை வரவேற்கிறோம். நன்றி!

உரிமை?

உரிமை யாருக்கு? உடைமை யாருக்கு?

தெய்வத் தமிழ் படைத்த நம் முன்னோர் அதை பொதுமக்கள் நலனுக்காக இறையருளால் வெளியிட்டார்கள். அன்றி இதற்காக சொந்தம் கொண்டாடவில்லை.

இந்தத் தளத்தில் உள்ள பாடல்கள், பாசுரங்கள், திருமுறைகள் யாவும் முன்னோர் அருளிச் செய்தவை. அவற்றுக்கு காப்பாக நாம் திகழ வேண்டும். காப்புரிமை கொண்டாட முடியாது.

இருப்பினும், இந்தப் பாடல்களுக்கு, பாசுரங்களுக்கு, திருமுறைகளுக்கு அடியேன் எளிய தமிழில், தற்போது நாம் புழங்கிவரும் மொழியில், முன்னோர் அடியொற்றி விளக்கங்களை அவ்வப்போது எழுதிச் சேர்த்து வருகிறேன். இவற்றுக்கான முழுப் பொறுப்பும் அடியேனுடையது. வாசகர் எவரேனும் ஏதாவது பிழை அல்லது குறை காண நேர்ந்தால் உடனே அடியேனுக்குத் தகவல் தரவும். அவற்றை உடனே சரி செய்வோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி!

ABOUT DEIVATAMIL

 ABOUT DEIVATAMIL

OHM

Ohm Namo Narayanaya

Get to know yourself through deivatamil.com !

deivatamil is a bilingual (Tamil & English) e-magazine, owned by Alahappa Grafix, Chennai -4 (India), deivatamil occupies a unique place among the hindu tradition and spiritual field.

From a modest beginning in Chithirai vishu, Sarvajith Tamil Year (April 14, 2007), deivatamil has come a long way in its mission to propagate the traditional tamil poems like naalayira divya deivatamil, hindu bakthi oriented poems and articles etc., It has at once unique and universal appeal.

The writers to the magazines, contribute with a sense of involvement and sense of participation to propagate deivatamil and make deivatamil.com occupy its unique place. deivatamil focuses on the youth as it believes that they are our future citizens contributing to the greatness of our country and to our religion.

Regular contests are held for the students and articles for their self improvement are a regular feature. deivatamil receives feedbacks from readers worldwide whose comments are received with an open mind! In summary, deivatamil is striving to keep the Tamil spirit and nationalist mind, religious thoughts among the readers around the world.

by

Senkottai Sriram.

sriram@journalist.com

DEIVATAMIL  TEAM

DEIVATAMIL  TEAM

ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே

தளத்தை நிர்வகிப்பது – SSS Media Work, Chennai

பராமரிப்பு, நிர்வாகி :

செங்கோட்டை ஸ்ரீராம், எம்.பி.ஏ

முகவரி: F 101, VGN Southern Avenue, Potheri,

Kattankulathur PO, Chennai 603 203

sriram@journalist.com

cell num: +91 988 404 9 108 / 9444 55 45 00

Leave a Reply