682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவனடியார்களோடு இந்து முன்னணி திருவாசகம் பாடி போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கடந்த வாரம் திருவாசகம் பாடிய சிவனடியார்களிடம் பணம் செலுத்த வலியுறுத்தி அவதூறாக பேசி வெளியேற்றியதாக கருதி, அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சிவனடியார்கள் மற்றும் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர்.
போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில், இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், தென்காசி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கயிலை கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றனர்.
அங்கு காசி விஸ்வநாதரை சிவாயநம நாமாவளி பாடி வலம் வந்துபலீபீடம் அருகில் அமர்ந்து திருவாசகம் பாடினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது கடந்த வாரம் சிவனடியார்களை அவதூறாகப் பேசி வெளியேற்றிய திருக்கோவில் நிர்வாகத்தினர் யாரும் தடுக்கவில்லை.
பல ஆண்டுகளாக நடை பெற்றுவரும் வழக்கம் போல் திருவாசகம் பாடுவோம் என்றும் தடுத்தால்போராட்டம் நடத்துவோம் என்றும் சிவனடியார் பெருமக்களோடு இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என மாநிலத் துணைத் தலைவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் பால்ராஜ், குளத்தூரான், உலகநாதன், ஆறுமுகம், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவா, மாரியப்பன், பெரியகாசி, திருமலை, மாரிமுத்து, ஈஸ்வரன் தென்காசி நகரத் தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர தலைவர் மாசானம் செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் நாராயணன், தென்காசிநகர செயலாளர் சொர்ணசேகர் பாலாஜி நகர செயற்குழு உறுப்பினர் மணி, சிவனடியார் திருக்கூட்டத்தைச் சார்ந்த சத்தியபாமா உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


