பொய்கையாழ்வார் அறிமுகம்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் – அறிமுகம்:

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *
தேசுடனே தோன்று சிறப்பால்.
– மணவாள மாமுனிகளின் உபதேசரத்னமாலை

அவதரித்த ஊர் : திருவெஃகா (காஞ்சிபுரம்)

அவதரித்த மாதம் : ஐப்பசி

அவதரித்த நட்சத்திரம் : திருவோணம்

அவதார அம்சம் : பாஞ்சஜன்யாம்சம்

அருளிச் செய்த பிரபந்தம் : முதல் திருவந்தாதி

——–

(குரு பரம்பரைப்படி…)

 

துலாயாம் ச்ரவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்
த்வாபரே பாஞ்சஜந்யாம்சம் ஸரோயோகிந மாச்ரயே.

ஸ்ரீபாஞ்சஜந்ய அம்சத்தில், துவாபரயுகத்தில்,
862901-வதான சித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் சுக்ல பட்சம் அஷ்டமி திதி
செவ்வாய்க்கிழமை கூடிய திருவோண நட்சத்திரத்தில்,
ஸர்வேஸ்வரனை பிரம்மா அஸ்வமேத யாகத்தால் ஆராதித்த இடமான
காஞ்சிபுரத்தில்,
புண்ணியத்தை பெருக்கத்தக்க திருவெஃகாவில்,
யதோக்தகாரி ஸந்நிதிக்கு அடுத்த பொய்கை புஷ்கரணியில்
விகஸித்த பொற்றாமரை மலரில், அயோநிஜராய் அவதரித்து,
ஒப்பிலாத பகவத் பக்தியுடையவராய் எழுந்தருளியிருந்தார்.

இவர் அருளிச் செய்த ப்ரபந்தம் முதல் திருவந்தாதி, 100 பாசுரங்கள்

மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள் – 6.

Leave a Reply