682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

- என். ரவிச்சந்திரன்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மகா குடமுழுக்குக்கு இன்னும் ஒரே நாள் மட்டும் உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் களைகட்ட தொடங்கி இருக்கிறது- முன்னேற்பாடுகள் தீவிரம்:
ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் மகா குடமுழுக்கு நடைபெற இன்னும் ஒரே நாளில் உள்ளது.
இந் நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் பகுதி களைக்கட்ட தொடங்கி உள்ளது. வருகிற 14-ஆம் தேதி காலை 5:10 மணி முதல் 6:20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக 2 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராஜகோபுரம் திருவாச்சி மண்டபம், கோவர்த்தன அம்பிகை கோவில், கணபதி மண்டபம் ஆகிய பகுதிகளில் வர்ணம் பூசும் பணிகள், கோவில் முன்பு பந்தல் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து, குடமுழுக்கிந்கான சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலரத வீதி, .சன்னதி தெரு, கீழ ரத வீதிகளில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு, தற்காலிகமாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் குடமுழுக்கினைக் காணும் வகையில் எல் இ டி திரைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 3000க்கும் மேற்பட்ட காவல்
துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 14 மண்டபங்களில் 5 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவசர மற்றும் மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வாகனங்கள் பேரன்களில் உள்ளது.
சுகாதாரத் துறை சார்பில் ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.