682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை க்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.
தற்போது
சபரிமலை மஞ்சமாதா கோயில் அருகே புதிய நவக்கிரக சன்னதி கட்டப்பட்டது.
பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நாளை சனிக்கிழமை நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை முன்னோடி பூஜைகள் நடத்தி ஜூலை13 காலை வேதபாராயண முறைப்படி நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து அலங்காரம் பூஜைகள் நடத்தி பிரதிஷ்டை சடங்கு வழிபாடுகள் நடைபெறும்.இரவு நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
இந்த மாதம் ஜுலை -2025 ல் மூன்று முறை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
.
நவகிரகங்கள் பிரதிஷ்டைக்காக
11.7.2025 இன்று மாலை 5 மணி திருநடை திறக்கப்பட்ட்டது. 13.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.
மீண்டும் ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக 16.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 21.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.
மீண்டும் நிறைபுத்தரி பூஜைக்காக
29.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 30.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்