குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

_mithunam.jpg" border="0" align="left" width="94" height="89" />மிதுனம் :

குரு பகவான் உங்களின் பாக்ய ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து தொழில் ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்தத் தொழில் ஸ்தான சஞ்சாரத்தினால் செய்தொழில் ஏற்ற இறக்கமாக இருக்கும். நண்பர்கள் இணக்கமாகப் பழகுவதுபோல் இருந்தாலும் மறைமுக சங்கடங்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் வருமானம், எதிர்பார்த்த அளவு வந்து கொண்டிருக்கும்.

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தின் மீது படுகிறது. இதனால் உபரி வருமானம் அவ்வப்போது கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

அரசாங்கத்திலிருந்து சில சலுகைகள் கிடைக்கும். நீண்ட நாளைய பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்களின் அனுபவ அறிவு, தக்க சமயத்தில் உங்களுக்குக் கை கொடுக்கும்.

குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் சுக ஸ்தான ராசியின் மீதும், அங்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருக்கும் சனி பகவான் மீதும் படிகிறது. இதனால் தாயின் உடல் நலன் மேம்படும். உங்களின் அறிவுத் திறனும் உயரும். உடல் உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள். சிலர் உடலை வருத்தும் விரதங்களைக் கடைப்பிடிக்கும் ஆர்வத்தைப் பெறுவீர்கள். ஆயின், “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதை மறவாதீர்கள். மற்றபடி எதிரிகளை அவர்களின் போக்கிலேயே சென்று உங்கள் வசப்படுத்திக் கொள்வீர்கள்.

குரு பகவான் உங்களின் ருண (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் ராசியைப் பார்வை செய்வதால் உற்றார், உறவினர்களால் நன்மை அடைவீர்கள். திடீரென்று சம்பந்தமில்லாதவர்கள் வந்து உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை  ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெரிய கடன்களையும் முழுமையாக அடைத்துவிடுவீர்கள். தேக ஆரோக்யத்தை சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் பிரச்சினைகள் பெருமளவு குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி உங்களுடன்  நட்புடன் நடந்து கொள்வார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். அதேநேரம் மனதில் காரணமின்றி கவலை குடிகொண்டிருக்கும்.

வியாபாரிகளுக்குத் தேவையான பணப் புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். போட்டிகளையும் சமாளிக்கலாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராகவே முடிவடையும். இருப்பினும் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கூட்டாளிகளிடமும் உங்களின் அந்தரங்க எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும். அதேநேரம் குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பூச்சிக்கொல்லி மருந்துக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம், உங்களைத் திருப்திப்படுத்தும்.

அரசியல்வாதிகள், கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்போதுள்ள நிலையையே பயன்படுத்திக் கட்சி மேலிடத்திடம் நற்பெயர் எடுக்க முயலுங்கள். சில கண்டனங்களைச் சந்தித்தாலும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். இதனால் வருமானம் பெருகும். ரசிகர்களின் ஆதரவை, அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்; புரட்சிகரமாக எதையும் செய்ய வேண்டாம். வெளியூர் நிகழ்ச்சிகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். மேலும் உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் பழகுவதைத் தவிர்க்கவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபட்டு புதிய பலம் பெறுவீர்கள். உங்கள் உடமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். பேச்சிலும் கவனம் தேவை.

மாணவமணிகளுக்கு அவசர புத்தியால் பிரச்சினைகள் ஏற்படும். வீண் விவகாரங்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். எனவே “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கல்வியிலும், விளையாட்டிலும் மட்டும் ஈடுபடவும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் கறுப்பு கொண்டைக் கடலை மாலை அணிவித்து, குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். “நம: சிவாய’ என்ற திருவைந்தெழுத்தை தினசரி 108முறையாவது ஜபிப்பது அவசியம்.

 

Leave a Reply