பாலமேடு அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

பாலமேட்டில் அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழாவை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன தொடர்ந்து திங்கட்கிழமை மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து முளைப்பாரி திண்ணையில் வைத்து கும்மி அடித்து அபிஷேகம் தொடர்ந்து, சக்தி கிரகம் அலங்காரம் செய்து வாண வேடிக்கையுடன் நகர்வலம் வருதல் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் வாண வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து நகர்வலம் வருதல் அன்று மாலை பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல் வாணவேடிக்கையுடன் முளைப்பாரி நகர் வலம் வருதல் தொடர்ந்து, கோயிலில் உள்ள சக்தி கரகத்துடன் முளைப்பாரி தூக்கி கொடிக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கி அங்குள்ள முளைப்பாரிக்கு அபிஷேகம் செய்து சக்தி கரகத்துடன் கோயிலில் உள்ள முளைப்பாறியும் தூக்கி மங்கள வாத்தியத்துடன் மேளம் தாளம் முழங்க வான வேடிக்கையுடன் முளைப்பாரி தோட்டத்தில் இறக்கி வைத்து கும்மி அடித்து அபிஷேகம் செய்து தண்ணீர் விடுதல் நிறைவாக மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடு இந்த நாடார்கள் உறவின்முறை சங்கம் செய்திருந்தனர்.


மகா கும்பாபிஷேகம்:

மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர் கள், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது. ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் விழாக் குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடுகளை, நல்லதங்காள் ஆலய பங்காளிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply