குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

 

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

துலாம்:

குரு பகவான், உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து சஷ்டம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ஆறாம் ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பது அவ்வளவு விசேஷமில்லை என்றாலும், தன் சொந்த ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நலமே உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் கடுமையாகப் போராடி உங்கள் செயல்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாற்றுக் கருத்து கொண்டோர்களிடமும் பக்குவமாக நடந்துகொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவீர்கள். குடும்பத்திற்காக சில தியாகங்களைச் செய்வீர்கள். நேர்முக – மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. எதிர்பார்த்த அளவு கடனுதவி கிடைக்கும். இதன் மூலம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்ற வைராக்யம் உண்டாகும்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், தொழில் சீராகவே நடக்கும். பெரிய இழப்புகள் ஏற்படாது. நண்பர்களையும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் தட்டிக் கொடுத்துச் செல்வீர்கள். பழைய நண்பர்களையும் மறக்கமாட்டீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகளைக் கூற வேண்டாம்.

குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் அயன-சயன மோட்ச ராசி மீதும், அதில் அமர்ந்துள்ள சனி பகவான் மீதும் விழுவதால் குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் இணைவார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்களுக்கு நம்பிக்கை துளிர்விடும். விரயங்கள் ஏற்படாது. வருமானம் கையில் தங்கும்.

உத்யோகத்திற்காகவோ அல்லது கல்வி கற்பதற்காகவோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு, சிலருக்குக் கிடைக்கும்.

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிவதால் மேல்தட்டு மக்களின் ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகள் உதவி செய்வார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நூதனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கடினமான வேலையாக இருந்தாலும் அவற்றை சரியாக முடித்துக் கொடுப்பீர்கள். திறமைசாலி என்று பெயர் வாங்குவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். அதேசமயம் மனதில் காரணமில்லாத பதற்றம் குடி கொண்டிருக்கும்.

வியாபாரிகள் வியாபாரத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்படும். தனிக்காட்டு ராஜாவாக இருந்த நீங்கள், இந்தக் கால கட்டத்தில் போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். என்றாலும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாட்டார்கள். அதனால் சுய முயற்சிகளைக் கூட்டிக்கொண்டு உழைக்க வேண்டி வரும். இது தவிர கால்நடைகளையும் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். உங்களின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அதேநேரம் தொண்டர்களால் சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள். எனவே அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும், விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். அதேநேரம் மனதில் ஏற்படும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளையும் தவிர்க்கவும்.

பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.  குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தவும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எதற்காகவும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவும்.

மாணவமணிகள் பெருமைப்படும்படி மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களுக்காக நண்பர்களுடன் சண்டை போடுவதைத் தவிர்க்கவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை வழிபடவும். “”ஜெய்ராம், சீதாராம்” என்று எப்போதும்ஜபிப்பதால் அனுமனின் கருணையை எளிதில் பெறலாம்.

 

Leave a Reply