“சபரிமலையில் நாளை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்’
இது குறித்து சனிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:
டிசம்பர் 27-ம் தேதி மதியம் 12.3 0 மணிக்கு சிறப்புமண்டல பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் வர இருக்கிறார்கள்.
இதற்காக சிறப்பு ரயில்கள், கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அரவணை, அப்பம், போன்றவை போதிய அளவுக்கு இருப்பில் உள்ளது. தங்க அங்கி 26-ம் தேதி பம்பையை அடைந்தவுடன் அங்கிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் கொண்டு வருவார்கள்.
சிறப்பு மண்டல பூஜைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர் வந்து செல்ல டோலிகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு மண்டல பூஜை முடிந்தவுடன் திங்கள்கிழமை (டிச. 27) இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை
திறக்கப்படும் என்றார் ராஜகோபாலன்.
வரலாறு காணாத கூட்டம்: சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீஸôர் திணறி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிசம்பர் 27-ம் தேதி சிறப்பு மண்டல பூஜை நடக்க இருப்பதால் அதற்குள் ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்பதாலும், சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.
இதனால் கூட்டத்தைக் ஒழுங்குபடுத்த முடியாமல் கேரள போலீஸôர் திணறினார்கள். அதனால் மத்திய சிறப்பு அயுதப்படை போலீஸôரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தபட்டு சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகே சபரிமலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் சுமார் 10 மணி நேர காத்திருப்புக்குப் பிறகே ஐயப்பனை தரிசனம் செய்ய முடிந்தது.
சபரிமலையில் இன்று…
நடைதிறப்பு காலை 4.00 மணி
நிர்மால்ய தரிசனம் 4.05
மகா கணபதி ஹோமம் 4.15
நெய் அபிஷேகம் 4.20
உஷ பூஜை 7.30
உச்ச பூஜை 12.30
நடை சாத்தல் 1.00
நடை திறப்பு மாலை 4.00
தீபாராதனை 6.30
புஷ்பாபிஷேகம் இரவு 7.00
அத்தாழ பூஜை 10.30
ஹரிவராசனம் 10.50
நடை சாத்தல் 11.00