அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
7"/>
  • தை அமாவாசை இன்று (11.02.2021)
  • தை அமாவாசை அன்று தான் அந்த அதிசயம் நடந்தது
  • திதியும் விதியும் மாறிய திருத்தலம்

தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததுடன், 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர்.

அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிக்க அமாவாசை திதியையே பௌர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.

இங்கு அன்னையின் திருவிளையாடல் சிறப்பு க்குரியதாகும் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், அமிர்தலிங்கம். இவரது தவப்புதல்வன் சுப்பிர மணியன். இவர் இயல்பாகவே அன்னை அபிராமியிடம் தனியொரு ஈர்ப்பு பெற்றவர். அதன் காரணமாகவே பின்னாளில் அபிராமி ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார். திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் பலரும் இவரை பித்தன், கிறுக்கன் என்று பரிகசித்து வந்தனர்.

அந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு, இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் அவர் திருக்கடையூர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி சன்னிதியில் இருந்த சுப்பிரமணியன், தன்னை மறந்து அபிராமியை நினைத்து யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அதனால் மன்னரின் வருகையை கவனிக்கவில்லை.

சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம்,‘தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். இவர் ஒரு பித்தன். இங்கு தினமும் பஞ்சாங்கம் வாசிப்பார்” என்று புகார் கூறினர். சரபோஜி மன்னர், அந்த புகாரை உடனடியாக நம்பிவிட வில்லை.

மாறாக சுப்பிரமணியம் நிஷ்டையில் இருந்து விழித்ததும், “இன்று என்ன திதி?” என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணியம், தன் மனதில் அபிராமியின் முழு மதி போன்ற திருமுகம் நிரம்பியிருந்ததால், “பவுர்ணமி” என்று கூறி விட்டார்.

ஏதோ ஒரு நினைவில் சொல்கிறார் என்று நினைத்த மன்னன், மீண்டும் அதே கேள்வி யைக் கேட்டார். அப்போதும் சுப்பிரமணியத்தி டம் இருந்து “பவுர்ணமி” என்ற பதிலே வந்தது. ஆனால் அன்றைய தினமோ தை அமாவாசை நன்னாள் ஆகும்.

இரு முறை கேட்டும் எதிர்மறையான பதிலைச் சொன்னதால், கோபம் கொண்ட மன்னன், “அப்படியானால் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். இரவு முழு நிலவு தோன்றாவிட்டால், உம்மை அக்னிக் குண்ட த்தில் ஏற்றிவிடுவேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.

மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணியத்திற்கு அன்னையின் முழுமதி முகத்தில் மதி மயங்கி, தான் திதியை மாற்றிச் சொன்னது புரிந்தது. அன்னையின் காரணமா க தான் சொன்ன தவறை, அந்த அபிராமி அன்னையே சரி செய்வாள் என்று சுப்பிரமணி யன் நம்பினார்.

அமாவாசை அன்று முழுநிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண் டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அக்கால மரபுப்படி, அரிகண்டம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, அபிராமி அம்மன் சன்னிதி எதிரில் ஆழக்குழியில் எரி யும் நெருப்பின் மேல் விட்டம் ஒன்று வைத்து, அதில் நூறு கயிறுகளால் ஆன உறியினை கட்டி சுப்பிரமணியனை ஏற்றிவிடுவர். அபிராமி அம்மன் மேல் அந்தாதி பாடுவார், சுப்பிர மணியன். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் நிறைவின் போதும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறு பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் இழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணியன் ஏற்றப்பட்டார். மன்னரும், பக்தர்களும், ஊர்மக்களும் சூழ்ந்திருக்க, அன்னை அபிராமியை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். 78 பாடல்கள் முடிந்து விட்டது. 78 கயிறுகள் அறுபட்டு விட்டன. 79-வது பாடலை சுப்பிரமணியன் தொடங்கும் போது, அன்னை அபிராமி வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் உமிழ்ந்தது. அமாவாசை இருள் நீங்கி, வானில் பூரண பவுர்ணமி நிலவு தோன்றியது.

உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழு வதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அப்போது அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க’ என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.

மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவ ரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணிய த்தின் பக்தியை எண்ணி மெய்சிலிர்த்தனர் சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நில புலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.

சிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.

தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறு ம் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.

திருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந் து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடு துறையில் இருந்து செம்பொனார கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்ல லாம்.

வாழ்வின் வலிகளால் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற எளிய மக்களுக்கு சக்தி கொடுத்து, அவர்கள் வாழ்வில் வளம், நலன் கொடு க்கும் மந்திர சக்திவாய்ந்த நூலாக திகழ்கிறது ‘அபிராமி அந்தாதி.’ அபிராமி அந்தாதியின் ஒவ்வொருச் சொல்லும் மந்திரச் சொற்களா கவே இருக்கின்றன. ‘அந்தாதி’ என்றால் முதல் பாடலின் இறுதி எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகியவற்றுள் ஒன்று அதற்கடுத்த பாடலி ன் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவதா கும். அதாவது ஒரு பாடலின் அந்தம் அடுத்தப் பாடலுக்கு ஆதியாக வருவது ‘அந்தாதி’ ஆகும்.

அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாக உள்ளன. அபிரா மி அந்தாதியின் முதல்பாடல் ‘உதிக்கின்ற’ என் று தொடங்கி, அதன் நூறாவது பாடல் ‘உதிக்கி ன்றவே’ என்றே முடிகிறது. ஆம்! அனுதினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்.

அந்தாதி என்றால் முதல் பாடலின் இறுதி சொ ல்லையோ அல்லது தொடரையோ அடுத்து வரும் பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படும் நூலாகும். அதாவது ஒரு பாடலின் அந்தம், அடுத்தப் பாடலுக்கு ஆதியாக வருவது அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி திருக்கடை யூர் அபிராமி அம்மன் மேல் பாட பெற்றதாகும். அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாகும். அபிராமி அந்தாதியின் முதல் பாடல் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி, 100 வது பாடல் ‘உதிக்கின்றவே’ என்று முடிகிறது. அபிராமி அந்தாதியை நம்பினோர்கள் வாழ்வில் அஸ்தமனமில்லை.

”தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே” – என்கிறது அபிராமி அந்தாதி. அதாவது, மிகு ந்த செல்வம், கல்வி, என்றும் சோர்வில்லாத மனம், உடம்பில் தெய்வீக பொலிவைத்தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நல்ல அடியவர்களை நட்பாக்கித்தரும், கூடவே இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தன்னுடைய அடியவர்களுக்கு அள்ளித்தரும் திருக்கடையூர் அபிராமியின் கடைக்கண்கள் என்கிறது அபி ராமி அந்தாதி. அதுமட்டுமல்ல, அதன் நிறைவு பாடலான ‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லி யை’ பாடலில் ‘முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கு இல்லை’ என்று நிறைவடைகிறது.

அபிராமி அம்மனைத் தொழுவோர்க்கு எல்லா ம் கிடைக்கும் என்று சிற்சில பயன்களை சொ ல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி, எல்லாவிதமான நன்மைகளு ம் கிடைக்கும் என்கிறது அபிராமி அந்தாதி. இப்படிப்பட்ட மகிமை பொருந்திய அபிராமி அந்தாதி தோன்றிய நன்னாள் ஒரு ‘தை அமா வாசை’ ஆகும். அது தோன்றிய திருத்தலம் ‘திருக்கடையூர்’. சிவபெருமானின் அட்டவீரட் டத் தலங்களில் இங்குதான் எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்து காலசம்கா ரமூர்த்தியாக விளங்குகிறார் இத்தல ஈசன் அமிர்தகடேஸ்வரர்.

பாற்கடலை கடைந்தபோது உண்டான அமிர்த க்கடத்தில் உருவான ஈசன் இவர் என்பதால் இத்தல ஈசன் அமிர்தகடேஸ்வரர் எனப்படுகி றார். மார்க்கண்டேயருக்கு எமனிடமிருந்து அப யம் அளித்து, அந்த எமனை அழித்து, மார்க்க ண்டேயருக்கு என்றும் பதினாறாய் சிரஞ்சீவி யாய் இருக்கும் வரம் அளித்த திருத்தலம் இது என்பதால் திருக்கடவூர் என்று அழைக்கப்படு கிறது.

ஆம்! எம பயத்தை கடக்க உதவும் ஊர் என்பதா ல் திருக்கடவூர் என்றாகி, தற்போது திருக்கடை யூர் என்று வழங்கப்படுகிறது. மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்ற ஊர் இது என்பதால் சஷ்டிய ப்த பூர்த்தி, மணி விழா, பீமரத சாந்தி, சதாபி ஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதி னமும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. இதயநோய், பிற தீராத நோய் உள்ளவர்கள், ஆயுள்தோஷம் உள்ளவர்கள் இங்கு ஈசனை வழிபட்டு நோய்கள் குணமாகி ஆயுள் விருத்தி யும் பெறுகிறார்கள். இராஜகோபுரத்தில் இரு க்கும் கோபுர முனீஸ்வரரை வழிபட்டு, இங்கு மேற்குபார்த்தவண்ணம் அருளும் அமிர்தகடே ஸ்வரர் சன்னதி எதிரில் பக்கவாட்டில் அருளும் கள்ளவாரண பிள்ளையாரையும் வழிபட்டு வலம் வந்து, தம் அன்பர்களுக்கு

” கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும்,கோணாத கோலும்,
ஒரு துன்பமில்லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும்…”

என பதினாறு வகை செல்வங்களையும் அள்ளி த்தரும் அபிராமி அம்மனை தொழுவோம்… திருக்கடையூர் அபிராமி தாயே திருவடி சரணம்..

  • வலைப்பகிர்வு

Leave a Reply