திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

வைதீகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார̷் 0;

 

திருமழிசையார் திருக்குடந்தை செல்ல எண்ணினார். திருவெஃகா இறைவனை சேவித்துவிட்டு கணிகண்ணரோடு புறப்பட்டு நடந்து சென்றார். பயண வழியில் அவர் பெரும்புலியூர் என்னும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்.

திருமழிசையார் வெகுதூரம் நடந்து வந்ததால் மிகவும் களைப்புற்றார். தம் களைப்பு நீங்கிப் பயணம் கொள்ள விரும்பினார். எனவே ஓர் அந்தணரின் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார். அப்போது அங்கே வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமழிசையாரைக் கண்டதும், நான்காம் வருணத்தினனாகிய இவன் கேட்க நாம் வேதம் ஓதுவதாவது! கூடாது! என்று சட்டென நிறுத்திவிட்டார்கள். அதை அறிந்து கொண்ட திருமழிசையார், திண்ணையிலிருந்து இறங்கினார். உடனே அவர்கள் வேதம் தொடங்கி விட்ட வாக்கியம் தெரியாமல் விழித்துத் தவித்தார்கள். அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட திருமழிசையார், கீழே சிந்திக் கிடந்த நெற்களுள் ஒரு கரிய நெல்லை எடுத்து அவர்கள் பார்க்கும்படி உகிர (கிருஷ்ணாநாம் வ்ரிஹீணாம் நகனிர்ப்பிந்தம்), அந்தக் குறிப்பால் அவர்கள் விட்ட வாக்கியத்தை அவர்களுக்கு உணர்த்தினார். அவ்வேதியர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். திருமழிசையாரின் திருவடி பணிந்து, ஓஅடியாரே! தங்கள் பெருமை தெரியாது நாங்கள் செய்த தவறைப் பொறுத்தருள வேண்டும்ஔ என்று வேண்டினார்கள். அவர்களுக்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவத்தை எடுத்துரைத்து விடைபெற்றுச் சென்றார் திருமழிசையாழ்வார்.

திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு பல வீதிகளுக்கும் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள். வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது. ஆனால் அந்தக் காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை. அவர்கள் எல்லோரும் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள்.

பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார். யாகசாலையை விட்டுச் சென்று திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார். அவரைப் போற்றித் தம்முடன் யாகசாலைக்கு வந்து, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது. வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை திருமழிசையாருக்குச் செய்தார். அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர், நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா? என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

இதைக் கண்ட திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, திருமகள்நாதனை நோக்கி, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால், இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும்வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும் உன் உருவப் பொலிவை காட்டிவிடுஒ என்று வேண்டிக் காள்ளும் விதமாக பின்வரும் பாடலைப் பாடினார்.

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம்கொலோ?

இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்

சக்கரம்கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட

உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளைத் திருமகளும் பூமகளும் வருடிட, தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார். அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள். பிறகு திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

திருக்குடந்தைக்குச் சென்ற திருமழிசையாழ்வார், அங்கே கோயில் கொண்டு உறையும் ஆராவமுதப் பெருமானைக் கண்டு வணங்கினார். பின் காவிரி ஆற்றை அடைந்தார். தாம் பாடிய பாசுரங்கள் அடங்கிய ஏடுகளை எல்லாம் காவிரி ஆற்றிலே தூக்கி எறிந்தார்.

அவற்றுள் நூற்று இருபது பாசுரங்கள் கொண்ட திருச்சந்த விருத்தமும், தொண்ணூறு பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து திருமழிசையார் திருவடிகள் அருகில் சேர்ந்தன. உடனே அவ்விரு ஏடுகளையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று பெருமானை வணங்கி அவற்றை உலகம் உய்ய வெளிப்படுத்தினார்.

கோயிலுள் அரிதுயில் புரியும் பெருமானின் கோலத்தைப் பார்த்து, ஓகுடந்தையில் படுத்துறங்கும் பெருமானே, நடந்த கால்கள் நொந்தனவோ? பூமியை ஏனமாய் ஏந்திய உடல் குலுங்கினவோ? படுத்துறங்கும் நீ எழுந்து வந்து என்னோடு பேசு!ஔ என்று வேண்டினார். பெருமாளும் உடனே எழுந்து வந்தார். அடியவர்க்கு எளியவனாய் அருகில் வரும் ஆராவமுதனின் அற்புதக் கோலத்தைக் கண்டு, ஓவாழி நேசனேஔ என்றார் திருமழிசையாழ்வார்.

அவரை திருமழிசையார் பின் வருமாறு பாடினார்…

கடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்

இடந்த மெய் குலுங்கவோ விலங்குமால் வரைசுரம்

கடந்த கால் பரந்த காவேரிக் கரை குடந்தையுள்

கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி நேசனே!ஔ

பிறகு திருமழிசையாழ்வார் குடந்தை நகரிலேயே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து அங்கிருந்தபடியே அவனடி சேர்ந்தார்.

 

Leave a Reply