கந்தசஷ்டி நிறைவு நிகழ்வு: குன்றத்து குமரன் சட்டத் தேரில் பவனி!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

kundrathu kumaran sattather bavani1

மதுரை: “அரோகரா”கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான
திருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளினார்.

சுப்பிரமணிய சுவாமி சட்டதேரில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சட்டத் தேரின் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 26-_ந் தேதி அன்று “சக்தி வேல் வாங்குதலும் ” 27-ந் தேதி (நேற்று)சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது.
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று( 28-ந்தேதி) காலையில்
தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, கோவில் வாசல் முன்பு சட்டத் தேர் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் நின்றது.

இதனையடுத்து, கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன் இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத் தேரில் காலை 8.32 மணிக்கு எழுந்தருளினார்.

இந்த நிலையில், காப்புக்கட்டி கடந்த 6 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து இருந்து சட்டத் தேரினை வணங்கிவடம் பிடித்து இழுத்தனர் .
காலை 8.50 மணிக்கு நிலையில் இருந்து சட்டத் தேர் வலம் நோக்கி நகர்ந்ததுசன்னதி தெரு, கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டகிரிவலப் பாதையில் சட்டத் தேர்மெல்ல , மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது பக்தர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

சட்ட தேரில் இருந்தபடியே முருகப் பெருமான் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் எழும்பிய “அரோகரா”கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தது. இதற்கிடையில் மேலரதவீதி, சன்னதி தெரு வழியே பக்தர்கள் வெள்ளத்தில்தேர்வலம் வந்து 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது அப்போது பக்தர்கள் “, கந்தனுக்கு அரோகரா கந்த சஷ்டி முருகனுக்கு என்று பக்தி கோஷங்கள் எழும்பி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவிலுக்குள் தங்கி விரதமிருந்த பக்தர்கள் தங்களது கைகளில் கட்டி இருந்த காப்பை கழற்றி விட்டு தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



Leave a Reply