682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சோழவந்தான் தென்கரை கோயிலில் திருக்கல்யாணம்:
சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து, முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகம் நடைபெற்றது. தொடர்ந்து,
ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை மாற்றுதல் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டியாளர்கள் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், திருவேடகம் ஏலவார்குழலி உடனுறை ஏடகநாத சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சண்முகருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று பாவாடை நெய் வைத்தியம் முடிந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணமும் இரவு சுவாமி திருவிதி உலாவும் நடைபெற்றது திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் திருக்கல்யாணம்!

உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபோகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சிலையாக காட்சி தரும் திருமுருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகள் செய்து பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் திருமண வைபோகம் செய்து வைத்தனர்.
மாங்கல்யம் சூட்டப்பட்டு, மாலைகளும் மாற்றப்பட்டது, தொடர்ந்து ,
தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த திருமண வைபோகத்தில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருமுருகன், வள்ளி, தெய்வாணை திருமணத்தை கண்டு ரசித்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது.
வில்லாபுரத்தில் சஷ்டி திருக்கல்யாணம்:

மதுரை, வில்லாபுரம் சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது .
மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கவிநாயகர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும்நிர்வாகிகள் செந்தில்குமார் , கருணாநிதி, சந்திரசேகர், அனுசியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர்கள் முருகன் மற்றும் மணமகளாக தேவசேனா இருந்து திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்தபின் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .


