திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்-அறிமுகம்!

 

திருமழிசையாழ்வார்

 

தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * – துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *

நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

– மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலை

 

அவதரித்த ஊர் : திருமழிசை

அவதரித்த மாதம் : தை

அவதரித்த நட்சத்திரம் : மகம்

அவதார அம்சம் : ஸ்ரீசக்ராம்சம்

அருளிய பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

——

(குருபரம்பரைப்படி…)

 

மகாயாம் மகரேமாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்,

மஹீஸாரபுராதீசம் பக்திஸாரம் அஹம்பஜே.

 

ஸுதர்சனமென்னும் திருவாழியின் அம்சத்தில்,

திருமழிசையில், துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம்

தை மாஸம் கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி

ஞாயிற்றுக்கிழமை கூடிய மகம் நட்சத்திரத்தில்,

பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற

அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக அவதரித்தார்.

 

ஆராவமுதாழ்வானுடைய திவ்ய மங்களத் திருமேனியையே தியானம் செய்துகொண்டு

அத்திருப்பதியிலே அனேக காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள்,

நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள்.

 

மங்களாசாசனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-16.{jcomments on}

Leave a Reply