6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

style="text-align: center;">6ஆம் பத்து 4ஆம் திருமொழி

1478

கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால்,

பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன்,

விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான்,

நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.1)

1479

கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர்

இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன்,

திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை

நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.2)

1480

கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை

எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன்

செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர்,

நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.3)

1481

கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை,

வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன்,

செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்

நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.4)

1482

விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண்

சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன்,

மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு,

நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.5)

1483

மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,

என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,

தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,

நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.6)

1484

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன்

பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன்,

சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர்,

நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.7)

1485

வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,

கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,

வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,

நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.8)

1486

கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,

குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,

பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,

நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.9)

1487

பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன்,

நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற,

கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல்,

மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே (6.4.10)

Leave a Reply