6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

6ஆம் பத்து 2ஆம் திருமொழி

1458

பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்

இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி

அறுத்தேன், ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி

வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.1)

1459

மறந்தே னுன்னைமுன்னம fமறந் தமதி யின்மனத்தால்,

இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில்

பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா

சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (6.2.2)

1460

மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும்,

ஊனேராக்கை தன்னை உ<த வாமை யுணர்ந்துணர்ந்து,

வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த

தேனே, நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே (6.2.3)

1461

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா

தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி

எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து

செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (6.2.4)

1462

பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப,

ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே

மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை

வேண்டேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.5)

1463

கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன்,

மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த

மல்லா, மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த

வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.6)

1464

வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய்,

ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி,

கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை,

தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.7)

1465

தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,

மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார்,

மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த

தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.8)

1466

போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்

கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த

தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த

வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.9)

1467

தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை,

வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார்

ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார்,

கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே (6.2.10)

Leave a Reply