திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்

 

திருமங்கையாழ்வார்: அறிமுகம்

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ *
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் * – ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த *
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.
– மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலை
அவதரித்த ஊர் : திருவாலிதிருநகரி
அவதரித்த மாதம் : கார்த்திகை
அவதரித்த நட்சத்திரம் : கார்த்திகை
அவதார அம்சம் : சார்ங்காம்சம்
————

(குருபரம்பரைப்படி…)

கார்த்திகே க்ருத்திகா ஜாதம் சதுஷ்க விசிகா மணிம்
ஷட் ப்ரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிய மாச்ரயே
ஸ்ரீசார்ங்காம்ஸராய் திருவாலிதிருநகரி சமீபத்தில் திருக்குறையலூரில் நான்காம் வருணத்தில் கள்ளர் குடியில் சோழராஜனுக்கு சேனைத் தலைவனான நீலன் என்பவருக்கு குமாரராக கலி 398-வதான நளவருஷம் கார்த்திகை மாஸம் பௌர்ணமி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் குமுதவல்லியை விவாகம் செய்துகொள்ள விரும்பி அவள் இஷ்டப்படி தினமும் பரமபாகவதர்களான வைஷ்ணவர்கள் ஆயிரத்தெட்டு பேர்களுக்கு மிக்க உபசாரத்துடன் ஆராதனம் செய்வித்து ஸ்ரீபாததீர்த்தமும் பிரஸாதமும் ஸ்வீகரித்து வந்தார். தன்னிடமிருந்த தனங்களையெல்லாம் ததீயாராதனங்களுக்கு செலவு செய்து, பின்பு சில காலம் கடன் வாங்கியும் பிறகு அதுவும் முடியாமல் வழிபறித்து பொருள்களை அபகரித்தும் வரும் நாளில், எம்பெருமான் இவரைத் திருத்த பிராட்டியாருடன் காட்டுவழியாக எழுந்தருள, ஆழ்வாரும் வாள்வலியால் மந்திரம் கொண்டார்.
நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கும் ஆறு அங்கங்களாக அமையும்படி
பெரிய திருமொழி (1084) திருக்குருந்தாண்டகம் (20) திருநெடுந்தாண்டகம் (30) திருவெழுக்கூற்றிருக்கை (1) சிறியதிருமடல் (40) பெரியதிருமடல் (78) ஆக 1253 பாசுரம் செய்தருளினார்.
மங்களாசாஸனம் செய்த திவ்யதேசங்கள் 86.
இவர் இந்த லீலா விபூதியில் 105 திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்தார்.{jcomments on}

Leave a Reply