style="text-align: center;">4ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி
3222
ஒன்றுந் தேவு முலகும்
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்
குன்றம் போல்மணி மாடம்
நீடு திருக்குரு கூரதனுள்
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2) 4.10.1
3223
நாடி நீர்வ ணங்கும்
தெய்வமும் உம்மையு முன்படைத்தான்
வீடில் சீர்ப்புக ழாதிப்பி
ரானவன் மேவி யுறைகோயில்
மாட மாளிகை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனைப்
பாடி யாடிப் பரவிச்
செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 4.10.2
3224
பரந்த தெய்வமும் பல்லுல
கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்
கரந்து மிழ்ந்து கடந்தி
டந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்க ளால்அ மரர்வ
ணங்கும் திருக்குரு கூரதனுள்
பரன்திற மன்றிப் பல்லுலகீர்.
தெய்வம் மற்றில்லை பேசுமினே. 4.10.3
3225
பேச நின்ற சிவனுக்
கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும்
நாய கனவ னேக
பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்
தேச மாமதிள் சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனுள்
ஈசன் பாலோர் அவம்ப
றைதலென் னாவதி லிங்கியர்க்கே? 4.10.4
3226
இலிங்கத் திட்ட புராணத்
தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய் வீர்களும்
மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி
வீசும் திருக்குரு கூரதனுள்
பொலிந்து நின்றபி ரான்கண்டீ
ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. (2) 4.10.5
3227
போற்றி மற்றோர் தெய்வம்
பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும்
வீடு பெற்றாலுல கில்லையென்றே
சேற்றில் செந்நெல் கமலம்
ஓங்கு திருக்குரு கூரதனுள்
ஆற்ற வல்லவன் மாயம்
கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. 4.10.6
3228
ஓடி யோடிப் பல்பிறப்பும்
பிறந்துமற் றோர்தெய்வம்
பாடி யாடிப் பணிந்துபல்
படிகால் வழியே றிக்கண்டீர்
கூடி வானவ ரேத்தனின்ற
திருக் குருகூ ரதனுள்
ஆடு புட்கொடி யாதி
மூர்த்திக் கடிமை புகுவதுவே. 4.10.7
3229
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது
நாராயணனருளே
கொக்கலர் தடந்f தாழை வேலித்
திருக்குருகூரதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் விளம்புதிரே 4-10-8
3230
விளம்பும் ஆறு சமய
மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்
அளந்து காண்டற் கரிய
னாகிய ஆதிப்பி ரானமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின்
உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9
3231
உறுவ தாவ தெத்தேவும்
எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்
மறுவில் மூர்த்தியோ டொத்தித்
தனையும் நின்றவண் ணம்நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொ
டோ ங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய
நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. 4.10.10
3232
ஆட்செய்த தாழிப்பி ரானைச்
சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை
மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கை யால்சொன்ன பாடல்
ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்
மீட்சி யின்றி வைகுந்த
மாநகர் மற்றது கையதுவே. (2) 4.10.11