நம்மாழ்வார் – அறிமுகம்!
நம்மாழ்வார்
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை *
பாரோர் அறியப் பகர்கின்றேன் * – சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் * எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்.
அவதரித்த ஊர் : திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
மாதம் : வைகாசி
நட்சத்திரம் : விசாகம்
அம்சம் : சேனைமுதலியாரம்சம்
அருளிச் செய்த பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
——-
(குருபரம்பரைப்படி̷ 0;)
வைசாகேது விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
பாண்ட்யதேசேக லேராதெள சடாரிம் ஸைந்யமம்பஜே.
ஸ்ரீசடாரி என்று கொண்டாடப்படும் சடகோபராக, தாம்பிரவருணி தீரத்தில் திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரியில் காரி என்பவருக்கும் உடைய நங்கையார்க்கும் சேனை முதலியாரே புத்திரராக அவதரித்தார்.
கலியுகம் பிறந்த 43-வது நாள் பிரமாதி வருஷம்
வைகாசி மாஸம் 12ந்தேதி பௌர்ணமி வெள்ளிக்கிழமை விசாக நட்சத்திரம் கூடிய கர்க்கடக லக்னத்தில் அவதாரம் செய்தருளினார்.
பிறகு ஆதிப்பிரான் ஸந்நிதிக்கு வடபாரிசத்தில் இருந்த திருப்புளியின் கீழ்சென்று ப்ரகாசித்திருந்தார்.
பூலோகத்தில் அநாதி கர்ம வசத்தர்களாகி ஜனன மரணங்களால் வருந்துகின்ற ஜீவாத்மாக்களை முக்தர்களாக்கும் பொருட்டு சகல வேதார்த்த சாரத்தையும் நான்கு பிரபந்தங்களாலே அருளினார்.
ருக் வேத ஸாரமான திருவிருத்தம் (100) யஜூர் வேத ஸாரமான
திருவாசிரியம் (7), அதர்வண வேத ஸாரமான பெரிய திருவந்ததி (87), ஸாம வேத ஸாரமான திருவாய்மொழி (1102) ஆக மொத்தம் 1296
பாசுரங்கள் அருளிச்செய்தார்.
மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-39.{jcomments on}