திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">4ஆம் பத்து 4 ஆம் திருவாய்மொழி

3156

மண்ணை யிருந்து துழாவி

வாமனன் மண்ணிது என்னும்

விண்ணைத் தொழுதவன் மேவு

வைகுந்த மென்றுகை காட்டும்

கண்ணையுள் நீர்மல்க நின்று

கடல்வண்ணன் என்னும் அன்னே.என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்

கென்செய்கேன் பெய்வளை யீரே (2) 4.4.1

 

3157

பெய்வளைக் கைகளைக் கூப்பிப்

பிரான்கிடக் கும்கடல் என்னும்

செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்

சிரீதரன் மூர்த்தியீ தென்னும்

நையும்கண் ணீர்மல்க நின்று

நாரணன் என்னும்அ ன் னேஎன்

தெய்வ வுருவில் சிறுமான்

செய்கின்ற தொன்றறி யேனே. 4.4.2

 

3158

அறியும்செந் தீயைத் தழுவி

அச்சுதன் என்னும்மெய் வேவாள்

எறியும்தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்

வெறிகொள் துழாய்மலர் நாறும்

வினையுடை யாட்டியேன் பெற்ற

செறிவளை முன்கைச் சிறுமான்

செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே. 4.4.3

 

3159

ஒன்றிய திங்களைக் காட்டி

ஒளிமணி வண்ணனே என்னும்

நின்ற குன்றத்தினை நோக்கி

நெடுமாலே. வா என்று கூவும்

நன்றுபெய் யும்மழை காணில்

நாரணன் வந்தான் என் றாலும்

என்றின மையல்கள் செய்தார்

என்னுடைக் கோமளத் தையே. 4.4.4

 

3160

கோமள வான்கன்றைப் புல்கிக்

கோவிந்தன் மேய்த்தன என்னும்

போமிள நாகத்தின் பின்போய்

அவன்கிடக் கையீ தென்னும்

ஆமள வொன்றும் அறியேன்

அருவினை யாட்டியேன் பெற்ற

கோமள வல்லியை மாயோன்

மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5

 

3161

கூத்தர் குடமெடுத் தாடில்

கோவிந்த னாம் எனா ஓடும்

வாய்த்த குழலோசை கேட்கில்

மாயவன் என்றுமை யாக்கும்

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்

அவனுண்ட வெண்ணெயீ தென்னும்

பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்

பெண்கொடி யேறிய பித்தே. 4.4.6

 

3162

ஏறிய பித்தினோ டெல்லா

வுலகும்கண் ணன்படைப் பென்னும்

நீறுசெவ் வேயிடக் காணில்

நெடுமால் அடியார் என் றோடும்

நாறு துழாய்மலர் காணில்

நாரணன் கண்ணியீ தென்னும்

தேறியும் தேறாது மாயோன்

திறத்தன ளேயித் திருவே. 4.4.7

 

3163

திருவுடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்

உருவுடை வண்ணங்கள் காணில்

உலகளந் தான் என்று துள்ளும்

கருவுடைத் தேவில்க ளெல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும்

வெருவிலும் வீழ்விலும் ஓவாக்f

கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8

 

3164

விரும்பிப் பகைவரைக் காணில்

வியலிடம் உண்டானே. என்னும்

கரும்பெரு மேகங்கள் காணில்

கண்ணன் என் றேறப் பறக்கும்

பெரும்புல ஆநிரை காணில்

பிரானுளன் என்றுபின் செல்லும்

அரும்பெறல் பெண்ணினை மாயோன்

அலற்றி அயர்ப்பிக்கின் றானே. 4.4.9

 

3165

அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்

அகலவே நீள் நோக்குக் கொள்ளும்

வியர்க்கும் மழைக்கண் துளும்ப

வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்

பெயர்த்தும் கண் ணா. என்று பேசும்

பெருமானே. வா. என்று கூவும்

மயல்பெருங் காதலென் பேதைக்

கென்செய்கேன் வல்வினை யேனே. 4.4.10

 

3166

வல்வினை தீர்க்கும் கண்ணனை

வண்குரு கூர்ச்சட கோபன்

சொல்வினை யால்சொன்ன பாடல்

ஆயிரத் துள்ளிவை பத்தும்

நல்வினை யென்றுகற் பார்கள்

நலனிடை வைகுந்தம் நண்ணி

தொல்வினை தீரவெல் லாரும்

தொழுதெழ வீற்றிருப் பாரே. (2) 4.4.11

Leave a Reply