திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">6ஆம் பத்து 4 ஆம் திருவாய்மொழி

3376

குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும்

உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல

அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி

இரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே? 6-4-1

 

3377

கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்ததும் கெண்டை யொண்கண்

வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல

மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து

நேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே? 6-4-2

 

3378

நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச்

சிகர மாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும்

புகர் கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பிஎன்றும்

நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இனி நோவதுவே? 6-4-3

 

3379

நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்

சாவப் பாலுண் டதும்ஊ ர் சகடம் இறச்சா டியதும்

தேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து

மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இ னி வேண்டுவதே? 6-4-4

 

3380

வேண்டி தேவ ரிரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்

பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்

காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ் சம்செய்ததும்

ஈண்டு நான்அ லற் றப்பெற் றென்எ னக்கு என்ன இகலுளதே? 6-4-5

 

3381

இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும்

உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல

அகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே

பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே? 6-4-6

 

3382

மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும்

புனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே

நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே? 6-4-7

 

3383

நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து

வாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல

மாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே

காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே? 6-4-8

 

3384

கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய்

உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல

வலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை

மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே? 6-4-9

 

3385

மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர்

பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்

விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள்

நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே? 6-4-10

 

3386

நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்தன்

வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம்

கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன

தூய வாயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே 6-4-11

Leave a Reply