இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

விழாக்கள் விசேஷங்கள்

" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/12/gurupeyarchi_5_simmam.jpg" align="left" border="0" width="83" height="87" />

https://www.dinamani.com/edition/astrology.aspx?starname=leo

சிம்மம்:

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உற்சாகமான வாரம். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். எடுத்த காரியங்களை சிறப்பாக முடிப்பதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தானாகவே விலகி விடுவார்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். நீங்கள் கேட்கும் செய்திகள் நிம்மதியைத் தரும்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்குத் திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகளில் நீங்கள் தைரியமாக ஈடுபடலாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். வரவும், செலவும் சமமாக இருப்பதால் புதிய குத்தகை முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட காரியங்களில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவும்.

கலைத்துறையினரை பொறுத்தவரை அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவீர்கள்.குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நலம் பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 23,24

சந்திராஷ்டமம்: இல்லை..

Leave a Reply