https://www.dinamani.com/edition/astrology.aspx?starname=pisces
மீனம் :
மகிழ்ச்சிகரமான வாரம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் லாபம் அடைவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பாராத வகையில் பொருள் சேரும். பொருளாதாரம் சீராக இருக்கும். சிலருக்கு வீடு மாறும் யோகம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் சிறிய அளவு முயற்சிகளிலும் நல்ல பலனைக் காண்பீர்கள். சக ஊழியர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.வருமானம் சீராக இருக்கும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு தொட்டது எல்லாம் துலங்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய நிலங்களை வாங்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதை முழுவதும் அனுபவிக்க இயலாத வகையில் சில குறுக்கீடுகள் தோன்றும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் சிரமங்கள் உண்டாகும். லைட்மேன்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவும்.
பெண்மணிகள் கணவரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. அனைத்து விஷயங்களையும் குடும்பத்தினரை ஆலோசித்துச் செய்யவும்.
மாணவமணிகள் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.
பரிகாரம்: ராம பக்த அனுமனை “ராம்ராம்’ என்று ஜெபித்துக்கொண்டே சுற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 22,23
சந்திராஷ்டமம்:26,27