இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

விழாக்கள் விசேஷங்கள்

" height="85" />

தனுசு:

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குதூகலமான வாரம். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களால் நல் வழியைத் தெரிந்துகொள்வீர்கள். கடன் தொல்லைகள் குறையும். எதிர்காலத்திற்குத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய சக்தியுடனும், யுக்தியுடனும் எதிரிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீகச் சொத்துக்களை கவனத்துடன் பராமரித்து வரவும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடவும். சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்வீர்கள்.

வியாபாரிகள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பேச்சுத் திறமையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

விவசாயிகளுக்குக் கொள்முதலில் லாபம் பெருகும். புதிய நிலங்களை வாங்க இது உகந்த நேரம்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாது. உங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கட்சித் தலைமையைக் கவர முயற்சிக்கவும்.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி உங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு சற்று குழப்பமான நிலைமை தென்படும். அதனால் கணவரிடம் மனம் திறந்து பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஒருமித்த மனத்துடன் படித்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.

அனுகூலமான தினங்கள்; 25,26

சந்திராஷ்டமம்: 21,22.

Leave a Reply