மனமுருகி வேண்டு..! இறையருகே உண்டு!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8de0ae9fe0af81-e0ae87e0aeb1e0af88e0aeafe0aeb0e0af81e0ae95.jpg" style="display: block; margin: 1em auto">

jeyadevar
jeyadevar
jeyadevar

ஸ்ரீஜயதேவர், கி.பி. 12 ம் நூற்றாண்டில் பூரி க்ஷேத்திரத்தின் அருகில் பில்வகாம் என்கிற ஊரில் வசித்து வந்த நாராயண சாஸ்திரியார் – கமலாம்பாள் என்கிற திவ்ய தம்பதிகளுக்கு ஜயதேவர் திருக்குமாரராக அவதரித்தார்.

இவர்களுக்கு நெடுநாட்களாக புத்திர பாக்யம் இல்லை. இவர்கள் பூரி ஜெகந்நாதரை இடைவிடாது வழிபட, திருமால் அருள்கூர்ந்து, இறை அம்சமும், வேத வியாசரின் வடிவாகவும் ஜயதேவர் அவதரித்தார்.

ஜெயதேவருக்கு பத்மாவதி என்கிற பெண்ணை மணமுடித்தார்கள். அதிதிகளுக்கு தான தருமம் செய்து வந்தார். ஜயதேவருக்கு கண்ணனுடைய லீலா விநோதங்களைப் பாடலாகப் பாட, அதற்கு பத்மாவதி அபிநயம் செய்து ஆடுவாள்.

ஜயதேவர் காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் கவி பாடும் திறன் கொண்டவன். அவனும் ஜகன்னாதர் மேல் பல கவிகள் பாடி இருந்தான். ஜயதேவரின் பாடல்கள் மட்டும் வேதமாக கருதி மக்கள் பாடி வருவதைக் கண்டு வெகுண்டான்.

உடனே “மக்களே…. எனது அரசாணையில் எனது பாடல்களை மட்டுமே நீங்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். ஆயின் மக்கள் ஜயதேவரின் பாடல்களைத் தவிர வேறு பாடல்கள் பாட இயலாது என சொன்னார்கள்.

அது கேட்டு கோபமுற்ற அரசன் மக்களையும், பண்டிதர்களையும், மிகவும் துன்புறுத்தி, கண்டிப்பாக தனது பாடல்கள் ஒலிக்க வலியுறுத்தினான். இதைக் கேட்ட பண்டிதர்கள் நீங்கள் இயற்றிய பாடல்களை பகவான் ஏற்றுக் கொண்டால் நாங்களும் பாடுகிறோம் என்றனர்.

உடன் ஐயதேவரின் பாடல்களையும், அரசர் பாடிய பாடல்களையும் கருவறையில் ஜகந்நாதரின் திருவடிகளில் வைத்து இரவு கோயில் கதவை மூடினர்.

மறுநாள் காலை கோயில் கதவைத் திறந்தால், மன்னனின் பாடல்கள் கோயிலில் ஆங்காங்கு தாறுமாறாக வீசப்பட்டிருந்தன. ஜயதேவரின் பாடல்கள் ஜகன்னாதரின் திருவடியில் இருந்தது. அப்பாடல்களை ஜகந்நாதர் பிரித்து படித்து, யாம் இதை ஏற்றுக் கொண்டோம். என்ற குறிப்பு திருமாலால் எழுதப்பட்டு இருந்தது.

என்னே… ஆச்சரியம்! இவ்வளவு அன்புக்கு ஏற்பு உடையவர் ஐயதேவரே… என வாழ்த்துவது போல் பகவான் அருளினார். என்னே அவர் செய்த பாக்யம்! அதாவது ஐயதேவர் ஆழ்ந்த பக்தியுடன் எழுதிய பாடல்களை பகவான் ஏற்றார் எனலாம்.

கலி காலத்தில் பக்தியுடன் நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான். நாம் இந்த சம்ஸார சாகரத்தில் இருந்து விடுபட முடியும். என்பதை ஜயதேவர் போன்ற மகான்கள் உணர்த்தி உள்ளார்கள்.

தன் பிழையை உணர்ந்த மன்னன் வருந்தி இறைவனிடம் மன்னித்து அருள வேண்டினான். திருமாலும் அவனின் இந்த நல்ல நோக்கத்தைக் கண்டு அவன் எழுதிய பதிமூன்று பாடல்களை ஏற்றுக் கொண்டார்.

அதாவது மனமுருகி வேண்டினால் இறைவன் அருளுவான் என்பதாகும். ஜயதேவர் பத்மாவதி திவ்ய தம்பதிகள் இறைவனோடு ஏக காலத்தில் இரண்டறக் கலந்து விட்டனர்.

கணவனின் சொல் கேட்டு மனைவி நடப்பதும், மனைவியின் சொல் கேட்டு கணவன் நடப்பதும் அவ்வாறு இந்த கலி யுகத்தில் கிடைப்பது அதிசயத்திலும் அதிசயம்.

இந்த பாக்யம் அடைய இந்த தம்பதிகள் போல் நாமும் வாழ்ந்து பகவானின் அருள் பெற வேண்டும். பக்தியுடன் பரந்தமானை அனுதினம் பாராயணம் செய்பவர்களும், கேட்பவர்களும், திருமாலின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்

மனமுருகி வேண்டு..! இறையருகே உண்டு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply