e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">
பகவான் கீதையில் தைவீ ஸம்பத் அல்லது தெய்வீகக் குணங்களை பற்றிக் கூறியிருக்கிறார்.
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் I
தயை, செளசம் முதலியவை தெய்வீகக் குணங்கள், நாம் ஆஸுரி (அசுர) குணங்களைக் கொண்டு இராக்ஷஸர்களாக இருக்கக் கூடாது.
தர்ம காரியங்களைச் செய்யும் ஒருவனிடம் நமது சந்தோஷத்தைக் காண்பிக்க வேண்டும். அவருடைய நற்காரியங்களைக் குறை கூறக் கூடாது. “இன்னும் தர்மம் செய்க” என்று அவரை ஊக்குவிக்க வேண்டும்.
பாபம் செய்பவர்களை நிந்திக்காதீர்கள். அவர்களுக்கு நல்ல உபதேசம் செய்யுங்கள். அப்படியும் திருந்தாவிட்டால் அவனை விட்டுவிடுங்கள், தூஷணம் மட்டும் செய்யாதீர்கள்.
யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
மேலே பகவான் சொன்ன மூன்று குணங்களான, என்றைக்கு எது நமக்குக் கிடைக்கிறதோ அதிலேயே திருப்திகொள்ளுதல், சுகதுக்கங்களில் சம பாவனையோடு இருத்தல் மற்றும் அஸூயைப்படாமலிருத்தல் ஆகியவற்றை நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நம் ஜீவனம் பவித்ரமாகிவிடும்.
மைத்ரீ, கருணா, முதிதா, உபேக்ஷா
ஆகவே சுகமாக இருப்பவன் விஷயத்தில் சிநேகம் (மைத்ரீ), கஷ்டப்படுபவன் விஷயத்தில் கருணை (கருணா), புண்ணியசாலியிடத்து சந்தோஷம் (முதிதா), பாபம் புரிபவன் விஷயத்தில் கண்டு கொள்ளாதிருத்தல் (உபேக்ஷா) ஆகிய இக்குணங்கள் மிக முக்கியமாகும்
முக்கிய குணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.