உட்புறம் தூய்மை ஆகாமல் புறத்தூய்மையால் பயன் என்ன?

ஆன்மிக கட்டுரைகள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

size-full" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/IMG_20200510_000723-e1589200884770.jpg" alt="" width="696" height="426" />

துளசிதாசரின் பக்திக்கும் நம் தமிழ்நாட்டு பக்திக்கும் அதிக வித்தியாசம் இல்லை துளசிதாசரின் பக்தியில் சைவ-வைணவ சமரசம் ஒரு சிறப்பு  இயல்பாக கருதப்படுகிறது வேதாந்த விவகாரங்களிலும் துளசிதாசர் சமரச ஞானியாக காணப்படுகிறார் துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் என்ற பிரித்து முடிவில்லாமல் விவகாரம் செய்து மூளையைக் குழப்பிக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் எல்லாம் அவனுடைய லீலை என்று உணர்ந்து பக்தி பண்ணிக் கொண்டு இருப்பதே மேலானது என்பது துளசிதாசரின் கொள்கை அவர் எழுதிய வினய பத்திரிகா என்ற நூலிலிருந்து சில பாடல்களின் கருத்துக்கள்

என்னை என் மனதின் மதியீனம் ராமபக்தி இருக்கிற கங்கையை துறந்து பனித்துளியை அன்றோ பருக ஆசை கொண்டுள்ளது

தாகத்துடன் கூடிய சாதக பட்சி புகை கூட்டத்தை பார்த்து மேகம் என்று நினைத்து விடுகிறது ஆனால் அதில் தன்மையோ நீர்மையும் கிடையாது தன்னை நோக்கும் கண்களுக்கு கெடுதலை சம்பவிக்க செய்கிறது. பெரும்பசிக்கு ஆசைப்பட்ட பருந்து பளிங்குத் தரையில் உருவத்தில் நிலை கண்டு அதைத் தனக்கு இரையாகிய ஒரு பட்சி என்று எண்ணி கொத்தினால் அதன் முகத்தில் காயம் உண்டாகும் என்பதையும் மறந்து அதன்மீது ஆவலுடன் பாய்வது போல் இருக்கிறது

அதாவது என் மனம் அழியும் தன்மையுடைய உலக விஷயங்களிலேயே பற்றுக்கொண்டு ஆசைகொண்டு ஆபத்தை மறந்து போகங்களை நுகர முற்படுகிறது. இன்றுவரை என் வாழ்நாள் வீணாகி விட்டது இனி வீணாக்க மாட்டேன் ராமனுடைய அருளால் அஞ்ஞானமாகிய இரவு கழிந்து போய் விட்டது. நான் விழித்துக் கொண்டு விட்டேன் மறுபடியும் படுக்க மாட்டேன். படுக்கையை விரிக்க மாட்டேன். எனக்கு ராமநாமம் ஆகிய அழகிய சிந்தாமணி கிடைத்துவிட்டது. அதை என் உள்ளம் ஆகிய கையிலிருந்து ஒருகாலும் நழுவ விட மாட்டேன் மனதிற்கு இன்பத்தை உள்ளிடும் ராமனின் சியாமள உருவமே உரைகல் அதிலே என் மனமாகிய பொன்னை  வைத்து உரைக்கப் போகிறேன்.

கேசவா என்ன சொல்லுவேன் ஏதும் சொல்வதற்கு இயலவில்லை. உன்னுடைய இந்த உலக படைப்பை கண்டு மனதிலே உனது லீலா வினோதத்தை உணர்ந்து கொண்டேன்‌ அதை இருதயத்திலே இருத்திவிட்டேன். உலக வாழ்வாகிற கானல் நீரிலே மிகவும் கொடிய முதலை ஒன்று உள்ளது. அதன் நீரைப் பருக வேண்டிவரும் சராசரங்களை அது உடலின்றியே பிடித்துக் கொண்டு விடுகிறது.

மாதவா

மோகமாகிற தளை ஏன் விடும்? வெளிப்புறத்தில் கோடி உபாயங்கள் செய்தும் என்ன? உட்புறத்தளை அற்று போகுமா? அதாவது உண்மையான உள்ள பரிசுத்தம் இன்றி ஸ்நானம் விரதம் முதலிய நியமங்கள் பிரயோஜனமில்லை. அஞ்ஞானம் அற்றுப் போகாது ராம பக்தியினால் தான் உள்ளம் சுத்தமடையும் என்பது தாத்பர்யம்.

நிரம்ப நெய்யை விட்ட கடாயில்  சந்திர பிம்பத்தை பிரதிபலிக்க செய்து விறகுகள் கொண்டு பல யுகங்களாக அனலில் இட்டு காய்ச்சி நாளும் சந்திர பிம்பத்திற்கு அழிவு ஏற்படாது. அதாவது அஞ்ஞானம் நீங்காத வரை பிறப்பு இறப்பு என்ற உலக பந்தம் அற்றுப் போக முடியாது. மரப் பொந்தில் வாழும் பறவை மரத்தை வெட்டினால் மட்டும் சாகாது. அது போல பல யோக சாதனைகளை புரிந்தாலும் விவேகமற்ற அவனுடைய மனம் ஒருபோதும் தெளிவு பெறாது உட்புறத்தில் மலங்களும் மனசிலே விஷய வாசனைகளும் நிரம்ப இருக்க அதை கழுவுவது எதற்கு பலவிதமாக முயற்சிசெய்து பாம்பு புற்றின் மீது பல முறை அடித்தாலும் பாம்பு சாய்வதில்லை. அதாவது சரீரத்தை எவ்வளவு பரிசுத்தமாக வைத்துக் கொண்டாலும் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கினாலும் மனதில் உள்ள விஷ வாசனைகள் நீங்கும் வரை மனத்தெளிவு உண்டாகி தளை நீங்காது

Leave a Reply