சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்
சென்னை சூலையில் சைவ சித்தாந்த ஞான பானுவாக விளங்கியவர் சோமசுந்தர நாயக்கர். அவர் வடமொழியிலும் தென் மொழியிலும் வல்லவர். நிறைய ஆன்மீக நூல்களை எழுதியவர். அ
ஒரு சிவாலயத்திற்கு சென்றார் வழக்கமாக பூஜை செய்யும் குருக்கள் அன்று வேறு ஊருக்கு போய் இருந்தார் அதனால் அவருடைய 12 வயது மகன் பூஜை செய்தான்.
நாயக்கர் பூஜையை கவனித்துக்கொண்டு இருந்தார் கோயிலின் அறங்காவலர் அங்கு வந்தார் அவர் சிறிது அகம்பாவம் பிடித்தவர் அந்தக் கோயிலின் அதிகாரி என்ற கர்வம் கொண்டிருந்தார் அவருக்கு பிரசாதமாக திருநீற்றை கொடுத்தான் அவள் அவற்றை கையால் வாங்கினார் அதைக் கண்ட நாயக்கருக்கு கோபம் வந்தது கொடுப்பவர் அர்ச்சகர் கொடுக்கப்படுகின்ற பொருள் ஐஸ்வரியம் ஆன விபூதி. மந்திரமாவது நீறு. வேதத்தில் உள்ளது நீறு. முத்தி தருவது நீரு
இத்தகைய திருநீற்றை கையால் வாங்காமல் விபூதியை அலட்சியம் செய்யலாமா அப்படி என்று கேட்டார் அறங்காவலர் நாயக்கருடைய பெருமையை அறியாதவர் அவருடைய கோபத்தைக் கண்டு அஞ்சினார் நான் திருநீற்றை அலட்சியம் செய்ய வில்லை சிறுவன் தானே என்பதால் அப்படிச் செய்தேன் என்றார்.
நாயக்கர் ஆலயத்தை வலம்வந்து அங்கே பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தியை எடுத்து வந்தார் அந்த நெருப்பை அறங்காவலர் உடம்பில் படும்படி வைத்தார் ஐயோ என்று துள்ளினார் அறங்காவலர் நாயக்கரை பார்த்து என்ன இது நெருப்புள்ள ஊதுபத்தி என் மீது படும்படி வைத்தது என்று கேட்டார் நாயக்கர் சிரித்துக்கொண்டே நெருப்பு தானே சுட்டதா என்ன என்று கேட்டார்
குருக்களின் மகனை சிறு பையன் தானே என்று மதிப்பிட்டது தவறு என்று உணர்த்துவது போல இது சின்ன நெருப்பு தானே என்று கேட்டார் தவறை உணர்ந்த அறங்காவலர் வெட்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.