தச்சம்பத்து காளியம்மனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

theechatti vizha near cholavanthan

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சம்பத்து கிராமத்தினர் செய்து வருகின்றனர்


Leave a Reply