திருவிருத்தம்

நம்மாழ்வார்

2498: ஏறுகோள் கூறி வரைவு கடாதல்

சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தி,விண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்கு,ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன் கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. 21

2499: தோழி தலைவனை நகையாடுதல்

கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோ,எம்மை வைத்ததிவ் வான்புனத்தே? 22

2500: தலைவன் குறையுற உரைத்தல்

புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன் ,
மனமோ? மகளிர்! நுங்காவல்சொல் லீர்,புண்ட ரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோநும் இயல்புகளே? 23

2501: பிரிவாற்றாத தலைவியின் ஈடுபாடு கண்ட செவிலி இரங்குதல்

இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே? 24

2502: தலைமகனது தாரில் ஈடுபட்ட தலைவி அற்றது கூறல்

எங்கோல் வளைமுத லா,கண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்,திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோன்
நங்கோ னுகக்கும் துழாய்,எஞ்செய் யாதினி நானிலத்தே ? 25

2503: நகர் காட்டுதல்

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை, கடந்தபொன்னே.
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது,எப் பாலைக்கும் சேமத்ததே. 26

2504: தலைவி தார் பெற்று மகிழ்தல்

சேமம்செங் கோனரு ளே,செரு வாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய்யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோ றெரி வீசும்நங கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே. 27

2505: தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி இரங்குதல்

தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம், நடுவே
வண்ணம் துழாவியோர் வாட யுலாவும்,வள் வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த  திருவரங் கா.அருளாய்
எண்ணந் துழாவு மிடத்து,உள வோபண்டும் இன்னன்னவே? 28

2506: தலைவி அன்னத்தை வெறுத்துரைத்தல்

இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெரும னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோ,குடிச் சீர்மையி லன்னங்களே . 29

2507: தலைவி அன்னங்களையும் வண்டானங்களையும் தூது வேண்டல்

அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ, இதுவோ தகவென் றிசைமின்களே . 30

Leave a Reply