முற்காலத்தில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த போரில், அதர்மம் வெல்ல, அவமானத்தால் தலைகவிழ்ந்த தர்மமானது, இந்த வனத்தில் தலைமறைவாக வந்து பொருமாளை தரிசித்து அங்கேயே இருந்தது. தர்மத்தைத் தேடி தேவர்கள் இங்கு வந்தனர். அதை அறிந்த அதர்மம், இந்த நிதி வனத்துக்கு வந்து தர்மத்துடன் யுத்தம் செய்தது. ஆனால், பகவான் அருளால் அது தோற்று ஓடியது. இந்தத் தலத்தின்தான் குபேரனாகிய உன் நவநிதிகளையும் பாதுகாக்க, அவற்றின் மேல் பெருமாள் சயனித்துக் கொண்டுள்ளார். அங்கே சென்று நீராடி, பகவானை பிரார்த்தித்தால் நவநிதிகளும் திரும்பக் கிடைக்கும் என்று குபேரனுக்கு பார்வதி வழி கூறினார். அதன்படி குபேரனும் மாசி மாத சுக்ல பட்ச துவாதசியன்று வேண்ட, நவநிதிகளும் திரும்பக் கிடைக்கப் பெற்றான்.
நவநிதிகளை தனக்குக் கீழ் வைத்து சயனத்தில் பெருமாள் இருப்பதால் வைத்த மாநிதிப் பெருமாள் என்றழைக்கப்டுகிறார்.
இத்தலத்தில் ஸ்ரீகரவிமானத்தின் கீழ், வைத்த மாநிதிப் பெருமாள் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் உள்ளார் பெருமாள். கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் தாயார்கள் அருள் புரிகின்றனர்.
குபேரன் நீராடியதால் இங்குள்ள தீர்த்தம் குபேர தீர்த்தம் எனப்படுகிறது. நிதியை அளந்து கொடுப்பதற்காக மரக்காலை தனது தலையணையாக வைத்துள்ளார் பெருமாள்.
ஆவணி மாதம் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. இந்தத் திவ்யதேசப் பெருமாளை தரிசித்தால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். செவ்வாய்க்கிழமை இந்தப் பெருமாளை வழிபடுவதால், செவ்வாய் தோஷம் நீங்கும்.
தலத்தின் பெயர் : திருக்கோளூர்
அம்சம் : செவ்வாய்
மூலவர் : வைத்தமாநிதி
உற்ஸவர் : நிக்ஷோபவிந்தன்
தாயார் : குமுதவல்லி, கோளூர்வல்லி
இருப்பிடம் : தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரி செல்லும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் பாதையில் 2 கி.மீ. தொலைவு.
நடைதிறக்கும் நேரம் காலை 7.30 – 12 மாலை 5 – 8
தரிசன உதவிக்கு: திருக்கோளூர் – பாலாஜி 9047217914