திருப்பாற்கடல்

ஆலய தரிசனம்

இவ்விரண்டு திவ்ய தேசங்களும் சாதாரணர்கள் காணுவதற்கு அரியது என்று கூறப்படுகிறது. ஆனால் எம்பெருமான், புண்டரீக மகரிஷிக்கு அருளும் பொருட்டும், சரஸ்வதியின் வேகத்தைத் தடுக்கும் பொருட்டும், பூலோக மக்களுக்குக் கருணை புரியவும், பூலோகத்தில் ஒரு திருப்பாற்கடலை நமக்காகக் காட்டி, அங்கு நின்றும் (நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் இணைந்த வடிவம்), கிடந்தும் (ஸ்ரீரங்கநாதர்-மகாவிஷ்ணு-பிரம்மா) அருள் பாலிக்கிறார். ÷ காஞ்சியை அடுத்து உள்ள வேலூர் வழி-காவேரிப்பாக்கத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது “திருப்பாற்கடல்’. இதை “நாராயண சதுர்வேதி மங்கலம்’ என்று கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

இங்கு, சிவலிங்கத்துக்குரிய ஆவுடையார் மேல் பிரசன்ன வேங்கடேசப்பெருமானும், அத்தி மரத்தினால் சுயம்புவாக எழுந்தருள ஸ்ரீரங்கநாதரும் அருகருகில் உள்ள இவ்விரண்டு ஆலயங்களில் காணக்கிடைக்காத மூர்த்தியாகக் காட்சி தருகின்றனர்.

திருப்பாற்கடல் தலபுராணம்:

கடிகாசல úக்ஷத்திரம்’ என்று சொல்லக்கூடிய சோளிங்கபுரத்தில் நரசிம்மனை நோக்கி சப்த மகரிஷிகள் தவம் செய்தனர். அவர்களில் புண்டரீக மகரிஷியும் ஒருவர். ÷ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திருநாள் வந்தது. அன்று வேறு ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலை தரிசிக்கும் ஆவலுடன் புறப்பட்டார் புண்டரீக முனிவர். ஆனால் வழியில் ஒரு பெருமாள் சந்நிதிகூடக் காணக் கிடைக்காததால் மிகவும் வருத்தப்பட்டார். அன்று வைகுண்ட ஏகாதசி தினமானதால், இன்று எப்படியேனும் ஒரு பெருமாளையாவது தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகையில், சற்று தொலைவில் ஒரு வனம் தெரிந்தது. அங்கு சிறிய சந்நிதியும், புஷ்கரணியும் இருப்பதை முனிவர் கண்டார்.

ஏதோ ஒரு பெருமாள் கோயில் தென்படுகிறது என்று எண்ணியவர், எதிரில் இருந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு கோயிலுக்குள்ளே பெருமாளை சேவிக்கச் சென்றார். ஆனால் அக்கோயிலின் கருவறையில் ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம் இருக்கக் கண்டார் புண்டரீக மகரிஷி. உடனே, “இன்று பெருமாளை சேவிக்கலாம் என்று வந்தால், இது சிவன் கோயிலாக இருக்கிறதே’ என்று சிந்தித்தார். புண்டரீக மகரிஷியின் மனக்குறையை நிவர்த்தி செய்ய திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், ஒரு வயோதிகராக அவர் முன்னே வந்தார். “”மகரிஷி! தாங்கள் பார்த்தது பெருமாள் சந்நிதிதான்” என்று கூறினார். ÷உடன் மகரிஷி, “”கிடையாது, நான் முதலில் சேவித்தது சிவன் கோயில்தான்” என்றார்.

÷””இல்லை! இது மகாவிஷ்ணு சந்நிதிதான். நீங்கள் வேண்டுமானால் என்னுடன் உள்ளே வந்து பாருங்கள்” என்று புண்டரீக மகரிஷியை கோயிலுக்குள்ளே அழைத்துச் சென்றார் வயோதிகர். மகரிஷிக்காக ஆவுடையாரின் மேல் எம்பெருமான் பிரசன்னமாக எழுந்தருளி சேவை சாதித்தார். மேலும், “”இன்று முதல் நீங்கள் புகுந்த இந்த இடம் பெருமாள் சந்நிதியாகட்டும்” என்றும் திருவாய் மலர்ந்தருளினார். சுயம்புவாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று புண்டரீக மகரிஷிக்கு பெருமாள் சேவை சாதித்தது, திருப்பாற்கடல் என்னும் இந்த úக்ஷத்திரத்தில்தான்.

ஆலய மகிமை:

சக்தி வாய்ந்த “புண்டரீக விமானம்’ என்ற ஆனந்த விமானம் இத்திருக்கோயிலில் உள்ளது. இங்கு மூலவரான ஸ்ரீஅலர்மேல்மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கர்ப்பகிரகத்தில், ஆவுடையாரின் மேல் சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சி. புண்டரீக மகரிஷிக்கு ஆவுடையார் மேல் சேவை சாதித்ததால் இவருக்குப் பிரசன்ன வேங்கடேசர் என்றும், மகரிஷி அனுஷ்டானம் செய்த புஷ்கரணி புண்டரீக புஷ்கரணி என்றும், தீர்த்தத்துக்கு புண்டரீக தீர்த்தம் என்றும், இந்த úக்ஷத்திரத்துக்கு புண்டரீக úக்ஷத்திரம் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

÷சிவனும் விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் “ஹரியும் சிவனும் ஒன்று’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இத்திருக்கோயிலில் பிரதோஷ காலத்தில் இருவருக்குமே அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு அருகிலேயே அத்தி ரங்கன், பாம்பணைமேல் பள்ளிகொண்டு எழுந்தருளியுள்ளார்.

அத்தி ரங்கன் நிகழ்த்திய அதிசயம்:

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய நாபிக்கமலத்தில் அவதரித்த பிரம்மா, எம்பெருமானின் பெருமையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாததால், பூலோகத்துக்கு வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய எண்ணி சரஸ்வதியை உடன் அழைத்தார். பிரணய கலஹத்தால் சரஸ்வதி தேவி யாகத்துக்கு உடன்வர மறுத்ததால், தன் மற்ற பத்தினிகளான சாவித்ரி, காயத்திரியரோடு யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. அதனால் கோபங்கொண்ட சரஸ்வதி “வேகவதி’ என்ற நதியாக மாறி, யாகத்தை அழிக்க சீறிப்பாய்ந்தாள்.

÷பிரம்மாவின் மேல் உள்ள கருணையால், எம்பெருமான் ஆதிசேஷன் மேல் சயனித்த கோலத்துடன் சீறிப்பாய்ந்து வரும் வேகவதி நதியை, அணைபோல் தடுத்தார். எம்பெருமான் அருளால் சரஸ்வதி தேவி கோபம் தணிந்து ஒதுங்கினாள். யாகமும் பூர்த்தியடைந்தது. பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்கி, பக்தர்களுக்கு நிரந்தரமாய் சேவை சாதிக்கத் திருவுள்ளம் கொண்டு க்ஷீராப்தியில் பாற்கடலில் இருக்கும் திருக்கோலத்துடன் இத்தலத்தில் கோயில் கொண்டதால், இவ்வூருக்கு “திருப்பாற்கடல்’ என்ற பெயரும், வேகவதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்துக் கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கநாதர் என்ற திருநாமமும் ஏற்பட்டது என இத்தலபுராணம் கூறுகிறது.

÷மிகவும் தொன்மையான ஆலயமான இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள மூலவரான ஸ்ரீரங்கநாதர் அத்தி மரத்தாலான வடிவில் ரங்கநாயகித் தாயாருடன் சேவை சாதிக்கிறார். மூலஸ்தானத்தில் படுக்கைக்கு பாம்பணையும், தலைக்கு மரக்காலையும் வைத்துக்கொண்டு அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்.

மங்களாசாஸனம்:

இங்கு எழுந்தருளியுள்ள இவ்விரு பெருமாளையும் வழிபட்டால் சித்ரகுப்தன் எழுதி வைத்த பாவக்கணக்கு முழுவதும் நீங்கப் பெறுவதாக ஸ்ரீநிகமாந்த மகா தேசிகர் அருளிய “மெய்விரத மான்மியம்’ என்னும் மங்களாசாஸனத்தில் 13,14-வது பாசுரங்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் – திருப்பாற்கடலில் உள்ள க்ஷீரம் எனும் அமிர்தப் பாற்கடல் சக்தியானது, பூமிக்கடியில் நீரோட்டமாய் பொங்கும் அற்புதத் தலங்களில் காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தத் திருப்பாற்கடலும் ஒன்று என்பது அற்புதத்திலும் அற்புதமல்லவா?

÷அதாவது இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இவ்விரண்டு பெருமாளையும் ஒருசேர சேவிப்பதால், மும்மூர்த்திகளை சேவித்த பலனும், யாராலும் பூத உடலுடன் சென்று சேவிக்க முடியாத 107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை சேவித்த பலனும், சித்திரகுப்தன் எழுதும் பாவக்கணக்கு கணிசமாகக் குறையும் பலனும் ஒருங்கே கிடைக்கிறதாம்!

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply