682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளி, தேவசேனா ஸமேத ஸ்ரீஷண்முக சுப்பிரமணியர் ஸ்வாமி சன்னதி முன்பு வைத்து வைத்து நகர இந்து முன்னனி மற்றும் கந்த சஷ்டி பாராயண குழு சார்பில் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் வேடம் அணிந்து வந்த குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு நகர இந்து முன்னனி தலைவா் மாசாணம் தலைமைதாங்கினார். குழு நிர்வாகிகள் தாயின் மடியில் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன் விஸ்வகர்மன் ராஜேஷ்வரி ஆகியோர் முன்னிலைவகித்தனா் பாராயண குழு ஒருங்கிணைப்பாளா் தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து முருகன் வேடமணிந்த சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. .
முன்னதாக சண்முகசுப்பிரமணியா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது.


