பெயரும் அதிருஷ்டமும் :
பிறந்த தேதி எண்; பிறந்த தேதி, மாதம் ஆண்டு கூட்டி வரும் எண்; இந்த இரண்டையும் எவரும் மாற்றிக் கொள்ள முடியாது. யாருக்கு எந்த எந்த எண்ணோ அந்த அந்த எண்படிதான் வாழ்க்கை நடக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் அமைகிற வாழ்க்கையை அதிருஷ்டமானதாக மாற்றியமைத்துக் கொண்டு நலம் பெற முடியும்; இதற்கு ஒரு வழியுண்டு என்கிறது எண் ஜோதிட சாத்திரம். அதுவே பெயரில் வரும் எழுத் துக்களின் எண்களைக் கூட்டி வரும் எண் எது எனப்பார்ப்பது. பிறகு, அது நமது பிறந்த, கூட்டு எண்ணுக்கு அதிருஷ்ட எண்ணாகப் பொருந் துகிறதா எனப் பார்ப்பது̷ 0; பொருந்தி நலம் தருவதாக இல்லையேல் பொருத்தமான நலம் தரும் அதிருஷ்ட எண்ணாக வரும்படி பெயரைச் சிறிது மாற்றிக் கொள்ளுவது. ஏனெனில், பெயரெண் அமைவது நம் கையில் தானுள்ளது. இருக்கும் பெயரை அதாவது “ராமன்’ என்றிருந்தால் “கிருஷ்ணன்’ என்று முழுவதும் மாற்றிக் கொள்ளுவதில்லை. பெயரெழுத்துக்களை மாற்றி, கூட்டிக் குறைத்து அதே பெயரையே அதிருஷ்ட எண் வரும்படி செய்து கொள்ளுவதாகும்.
பிறந்த எண்ணுக்குக் கூட்டு எண் நட்பு எண்ணாக உள்ளதாகலாம். கூடாத பகையெண்ணாகவும் இருக்கலாம். நட்பெண் என்பது பொருத்தமான சாதகமான எண்ணாக இருப்பது. பகையெண் பொருந்தாமல் பாதகமான எண்ணாக அமைந் திருப்பது. நட்பெண் ஆனால் நலம் தரும், பகையெண்ணானால் தீமை தரும்.
சிலர் அதிர்ஷ்டசாலியாக இருப் பதற்கும், சிலர் துரதிருஷ்டசாலியாக இருப்பதற்கும் இப்படிப் பிறந்த எண்ணும் கூட்டு எண்ணும் பொருந்தியிருப்பதும் பொருந்தாமல் இருப் பதுமே காரணமாகும்.
பொருந்தாத எண்களைப் பெயர் எண்ணை மாற்றிப் பொருந்துமாறு செய்துகொள்ள எண் ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஆகவே பெயரை மாற்றி, பிறந்த எண்ணுக்கோ, கூட்டு எண்ணுக்கோ பொருந்துமாறு ஓர் எண் வரும்படி அமைப்பது. பிறந்த எண் அதிருஷ்டமாக இருக்கிறதா, கூட்டு எண் நல்ல எண்ணா எனப் பார்த்தறிந்த பிறகு, எந்த எண் நல்லதாகப் படுகிறதோ அந்த எண்ணுக்கு ஏற்றபடி பெயரில் எண் வருமாறு செய்து கொள்ளலாம்.
அவரவர் தொழிலுக்கு, திரு மணத்துக்கு, ஆன்மிக நாட்டத்திற்கு ஏற்ப, கலையில், அரசியலில் வெற்றி பெறவும் ஏற்றபடி நல்ல எண்ணை அதிர்ஷ்ட எண்ணாக அமைத்துக் கொள்ளலாம்.
இந்த அதிர்ஷ்ட எண் வரும்படியே வீட்டை, வாகனத்தை வாங்கலாம். தொலைபேசி எண்ணையும், பயண இருக்கை எண்ணையும் அமையும்படி செய்து கொள்ளலாம்.
எங்கெல்லாம், எதிலெல்லாம் நாம் எண்களைப் பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் அதிலெல்லாம் நம் அதிருஷ்ட எண் வரும்படி பார்த்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் இதனால் மன நிறைவும் நம்பிக்கை யுமாவது நமக்குக் கிடைக்கும்.
பொருந்தாத எண் :
பிறந்த தேதி எண்ணுக்கும் கூட்டு எண்ணுக்கும் பொருத்தமின்றி இருப் பவர், நிறையப் பொருளும், புகழும் வரக்கூடிய கலைத் துறையிலேயே இருந்தாலும் அவ்வளவாகப் பொருளும் ஈட்டாமல், புகழும் ஈட்டாமல் இருப்பர். சினிமா எடுத்தும் இழப்பை ஏற்பவராகவே இருப்பர். சிலர் ஈட்டுவதும் இழப்பதுமாக இருப்பர். சிலர் பொருத்தமான எண்களின் பலத்தால் அதிருஷ்டம் மிக, நிறையப் பொருளும், புகழும் படைத்தவராக விளங்குவர்.
இப்படியே பல தொழில்களில் உயர்ந்திருப்போரும், கெட்டுப் போன வரும் உளர். காரணம் எண்களே! அரசியலில் இருந்தும் சிறைக்கு மட்டும் போவோரும், பதவி சுகமே காணாதவரும், பதவி சுகமும் பணமும் புகழும் மட்டும் சேர்ந்திருப்பவரும் எத்தனைபேர் இருக்கின்றனர்! காரணம் அதிருஷ்டம் தானே? இந்த அதிருஷ்டத்தை பெயரில் மாற்றம் செய்து ஓர் எண்ணை ஏற்றதாக வைத்துக் கொள்ளுவதால் அடைய முடியும் என்றால் அப்படிச் செய்து கொள்ளுவதுதானே புத்திசாலித்தனம்? எண்கள் கிரகங்களைக் குறிப்பதால் ஒரு குறிப்பிட்ட நல்ல எண் ஒரு குறிப் பிட்ட நல்ல கிரகத்தின் ஆட்சியைத் தரும். அப்படி ஓர் அதிருஷ்ட கிரக ஆதிக்கத்தையே ஓர் அதிர்ஷ்ட எண் வரும் வரை வைத்துக் கொள்ளுவதன் மூலம் அடைகிறோம் என்றறிய வேண்டும்.
அதிருஷ்ட எண் என்பது 1 முதல் 9 வரை உள்ள எண்களும் எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நமது பிறந்த தேதி எண்ணுக்கோ, கூட்டு எண்ணுக்கோ பொருந்துவது என்று அறிவோம்.