பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

பாபநாசம்: தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை அன்று பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரி, ராமேஸ்வரம், குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொது மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புனிதத் தலங்களான நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் ஆகிய தலங்களில் இன்று காலை முதலே அன்பர்கள் வரிசையில் நின்று புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். பக்தர்களின் வசதிக்காக, இந்தப் பகுதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப் பட்டன.

Leave a Reply