அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்

விழாக்கள் விசேஷங்கள்

அதிருஷ்டசாலியாகுங்கள்

பின்வரும் பக்கங்களிலுள்ள நட்சத்திரப்படி பெயரில் எழுத்தாக வந்தே ஆக வேண்டிய ஓசைகள், குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது கவனித்துச் சேர்க்க வேண்டியவை.

ஒரு மனிதன் குழந்தையாக இந்த உலகிற்கு வரும்போது ஆதாரமாக அமைவது நட்சத்திர பாதமே. இதற்குரிய ஒலிகள், அக்குழந்தையின் உடலில் ஒலிக்கும் ஓசையாகும். இதன் விளக்கமாகவே அதன் இயல்பும், திறமைகளும் அமைகின்றன. அவை அதிருஷ்டம் பெற்றுச் சிறந்த வாழ்க்கை தர வேண்டுமென்றால் அவ்வோசைக்கு ஊட்டம் தருவதாக அதன் பெயரமைந்து அது பலரால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டு வந்தாக வேண்டும்.

இப்படி ஓசை, நட்சத்திரப்படி பெயரில் அமையாததால் நிறையத் திறமையிருந்தும் குறிப்பிட்ட தொழிலில் வெற்றி கிட்டாமல் தவிப் பவர்களையும், நன்கு நடந்த குடும்பத் தொழிலையும் நஷ்டமாக்கியவர் களையும் கண்டும் கேட்டு மிருக்கிறேன்.

மிகப் பிரபலமான நடிகர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் வாதிகளையும், பிற கலைஞர்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்களை விட அதே துறைக்கான திறமை பெற்றிருந்தும் பலர் அவர்களைப் போலப் புகழும் பொருளும் பெற்றுப் பிரபலமாகவே போய்விட்டதன் காரணம் அவர்களுக்கெல்லாம் சரியான வாய்ப்புக்கள் கிட்டாமல் போனதுதான் என்பதையும், அப்படி வாய்ப்புக் கிட்டாமைக்கு அவர்கள் பெயர் அவர்களுடைய நட்சத்திர ஒலிப்படி அமையாத காரணமும் உண்டு என்பதும் நாம் அறிவோமோ?

அதிருஷ்டப் பெயரை அமைக்க

இதற்கு 1 முதல் 9 வரை உள்ள எண்களின் பயன்கள் என்னென்ன என்றறிய வேண்டும். (இந்நூலில் அதைக் காணலாம்.) உங்கள் வாழ்க்கையில் என்ன அடைய விரும்புகிறீர்கள்? அதாவது உங்களின் நோக்கம் என்ன? என்று கண்டு அதை எட்ட எவ்வெண் தேவை? எனக் கண்டுகொள்ள வேண்டும். பிறகு அவ்வெண் உங்கள் பிறந்த தேதி எண் அல்லது கூட்டு எண்ணுடன் பொருந்தி வருகிறதா? எனக் காணவும். வந்தால் பெயரில் அமைத்துக் கொள்ளுக

உங்கள் நட்சத்திரப்படி சில எழுத்துக்கள் பெயரில் வரவேண்டும். இதைப் பஞ்சாங்கம் பார்த்தறியலாம். இந்நூலிலும் தந்திருக்கிறோம். அந்த எழுத்துக்களும் பெயரில் வரும்படி அதிருஷ்ட எண்ணில் பெயரை அமைத்துக் கொள்ளுவது மிக நன்மை.

மற்றபடி, நேமாலஜி அது இது என மிகவும் குழுப்பிக் கொள்ள வேண்டாம். நம் நட்சத்திரப்படி நமக்கு எந்த ஒலியின் அதிர்வு உள்ளது என்பது தெரிய வருகிறது. அதுவும், அதிருஷ்டகரமான எண்ணும் அமைவதே போதும்.

Leave a Reply