{jcomments on}
px;" />1930வாக்கில் கவியரசர் ரவீந்திரர் இலங்கைத் தமிழரான திரு.ஆனந்த் குமாரசாமியை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போதுதான் தென்னாட்டில் “பகுத்தறிவு’ இயக்கம் மும்முரமாக இருந்தது.
ஒருநாள் பேச்சுக்கிடையே திரு. ஆனந்த குமாரசாமி, “இந்த இயக்கத்தார் ராவணனைத் தமிழனாக – அதாவது திராவிடனாகக் கருதிப் போற்றி ராமாயணத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்” என்றார்.
“என்ன, ராவணனை வால்மீகி எந்த இடத்திலும் திராவிடன் என்று குறிப்பிடவில்லையே!” – என்றார் கவியரசர் வியப்புடன்.
திரு.ஆனந்த குமாரசாமி, “இது அந்தப் “பகுத்தறிவாளர்’ கருத்தே தவிர தமிழர் கருத்தில்லை” என்றார் சிரித்தபடியே.
“வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன், பிரம்மாவின் மகனான புலஸ்தியனின் பேரன்; சிவபெருமானைத் தன் சாம கானத்தால் மகிழ்வித்தவன்; எனவே வேதியன்… பிரம்மகுலத்தவனாய் வேதம் பயின்றிருந்தும் பிறன் மனைவியை விரும்பித் தன் ஒழுக்கத்தினின்று வழுவி இழிந்தவனாய் அழிந்தான். ராமனோ வேதியனாக இராவிட்டாலும் ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருந்து ராவணனை வென்றான். எனவே, தீமைக்கும் நன்மைக்கும் நடந்தது இப் போராட்டம். இதுதான் உண்மை; பகுத்தறிவுக்கும் ஒத்தது” என்றார் கவியரசர்.
“ஆமாம், இதே கருத்தைத்தான் தமிழ் முனிவர் வள்ளுவரும், “வேதியன் வேதம் பயில மறந்தாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தைக் கைவிட்டால் இழிந்தவனாகிக் கெடுவான் என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று கூறி அந்தக் கருத்துடைய குறளை எடுத்துச் சொன்னார் திரு.ஆனந்த குமாரசாமி.
“மிகவும் அருமையானது இந்தச் செய்யுள் கருத்து. பாரத நாடு முழுவதற்கும் – ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் இந்தக் கோட்பாடு பொருந்தும்” என்று பாராட்டினார் கவியரசர்.
-ஆதாரம்: ப்ரவாஸி (வங்காளி)