அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்

விழாக்கள் விசேஷங்கள்

பெயரியல் / நேமாலஜி :

 

இதைப் “பெயரியல்’ எனலாம். இதன்படி பெயர் எப்படி இருக்க வேண்டும் எனச் சிலர் கூறும் கருத்துகள் ஏற்க முடியாதவை.
பெயரில், இல்லை, முடிவு போலத் தாழ்ந்த, இழந்த போன்ற பொருட்களின் சொற்கள் வரும்படி இருத்தலாகாது என்பர்.
மனோ, மணீந்தர் என்ற பெயரில் உள்ளவரும் “ந்த்ரன்’ எனப் பெயரின் முடிவில் அல்லது தொடக்கத்தில் இருப்பவரும் எவ்வளவோ மேல் நிலைக்கு வந்து புகழும் பொருளும் பெற்றவராக இருக்கின்றனர்.

உதாரணம் மனோஹர், எம்.ஜி. ராமச்சந்திரன், சந்திரபாபு நாயுடு என்ற பெயர்கள் உடையவர்களாவர்.

துன்பம் வராதவர் இல்லை. அவர்களுக்கு வந்த துயரம் அவர்கள் பெயரால்தான் எனக் கூற முடியாது. நேமாலஜிப்படி “ஆ’ என முடியும் பெயரில் உள்ளவருக்கு மட்டும் துன்பம் ஏதாவது இல்லாமலா இருக்கிறது?

முற்றுப் பெற்றதாகப் பெயர் இருக்கக் கூடாதென்கின்றனர். முற்றுப் பெறாத முடிவில் “ஆ’ ஓசை வரும் “விஜயா’ ஸ்டூடியோ புகழ்பெற்றதாகப் படம் எடுத்தனர் என்றால், ஏ.வி.எம். என முற்றுப் பெற்ற ஓசையுடைய பெயரில் உள்ள ஸ்டூடியோவும் புகழ்பெற்ற படங்களை எடுப்பதுதான் என்பதைப் பாருங்கள்.

பெயரில் முற்றுப்பெறும் ஓசையுடைய, அசோக் குமார், திலீப் குமார், அமிதாப் பச்சன், கமலஹாசன், ரவிச்சந்திரன் போன்றவர் வெற்றி பெறவில்லையா? ரஜினி என்பது பெண் பெயர்தான். இப்பெயரில் ஆண் நடிகர் புகழ்பெறவில்லையா?
பிரபுதேவா, ரம்பா இருவரும் ரஜினிகாந்தைவிடவா மேலுக்கு வந்துவிட்டனர்? இல்லையே! அஜந்தா படக்கம்பெனி மூடப்பட்டது.
ஆகவே நேமாலஜி என்பது சிலர் கூறும் சில பல சங்கதிகளைக் கணக்கிட்டுத் திண்டாடுவதில்லை. “அரோகரா’, “கோவிந்தா’ எனும் சொற்கள் இறைவனுடன் தொடர்புள்ளவையானாலும் அவை இழப்பை நினைவுபடுத்த வில்லையா?

“கனரா’ பாங்க் என்பதற்குப் பதில் “அரோகரா’ பாங்க் என இருந்தால் பணம் போடுவீர்களா? “கோவிந்தா’ கம்பெனியில் பார்ட்னர் ஆவீர்களா? எண் ஜோதிடம் எனில் இதில் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை. மங்கலமான பொருளும், இறைவன் பெயரும், நட்சத்திரப்படி பொருந்தும் எழுத்தும் வருமாறு ஏற்ற அதிருஷ்ட எண் அமையும்படி பெயரை அமைத்தால் போதும்.

பெயரின் முதலெழுத்து நல்லதாக, பொருள் சிறப்பு உள்ள பெயராக, பெயரில் வரும் எழுத்துக்களில் கூடியவரை “8′ போன்ற எண் அமையாமல் சுருக்கமாக, இன்ஷியலை சேர்க்காமலும் சேர்த்தும் நல்லெண்ணிக்கை, எண் வரும்படி வைத்துக் கொண்டால் போதும்.
பிறக்கும் போது வைக்கப்பட்ட பெயரைச் சில நல்ல மாற்றத்துடன் அமைத்துக் கொள்ளலாம். இல்லையேல் சுருக்கமாக, நற்பொருள் கொண்ட அதிருஷ்ட எண் வரும் பெயர்ச் சொல்லைப் புனை பெயராக வைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
பெயரியல் சங்கதி என்ன என்று அறியாமலேயே பலர் இதைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.

வேதமும் பெயரும்

இந்த உலகம் ஒலியிலிருந்து உண்டாகியது. அந்த ஒலி இறைவனுடையது. ஆகவே பிரணவம், ஓங்காரம் இதிலிருந்தே வேதம் விரிந்தது. ஆகவே வேத மந்திரங்களும், சொற்களும் ஓமின் பகுதி ஒலிகளே, அந்த வார்த்தைகள் பெயர்களாகும். அந்தப் பெயர்களுக்கு ஏற்ப பிரபஞ்சத்தில் பொருட்கள் எல்லாம், வேதம் உபதேசமாக கடவுள் ஸ்ரீமத் நாராயணனிடம் கேட்ட நான்முகன் எனும் பிரும்மாவால் படைக்கப் பட்டன. அத்தனை பெயர்களும் கடவுளான ஸ்ரீமந் நாராயணனுடையவையே! பலவற்றைப் பல பொருட்களுக்கும் பிற தேவதேவதைகளுக்கும் வைத்துவிட்டுச் சில அசாதாரணப் பெயர்களை மட்டும் தம்மைக் குறிக்க என்றே வைத்துக் கொண்டார்.

இவ்வகையில், அக்னி, நீர், நிலம், காற்று, ஆகாசம் மற்றும் இவ்வைம்பூதக் கலப்பால் உண்டான பொருட்களுக்கும், தேவதேவதைகளுக்கும் பெயர்கள் உண்டாயின. அவை யாவும் வேத ஒலிகளே. அவ்வொலிகளால் அவற்றை அடக்கியாள முடியும் என்பதே மந்திர சாத்திரம். இதையொட்டியே நவகிரகங்களைக் குறிக்கும் எழுத்துக்களுக்கும், எண்களுக்கும் பலன்களும் குணங்களும் குறிப்பிடப்பட்டன.

இதேபோல பஞ்சபூத உடல்களில் மனிதர்களாகப் படைக்கப்பட்ட ஜீவர்களான நமக்கும் ஓமின் இயற்கை ஒலி பெயராக உண்டு. ஆனால், நம் குடும்பத்தில் பிறந்தவுடன் நமக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது நம் இயற்கைப் பெயரில்லை. இந்தப் பெயர் நம் இயற்கைப் பெயரொலிக்கு ஏற்ற அதிர்வை உடையதாக அமையுமானால் நம் உள்ளாற்றல் கிளப்பப் பெற்று அதிக சக்தியும் ஞானமும் கொண்ட அதிருஷ்டசாலிகளாக இன்னும் நன்றாக வாழ்ந்து உயர்வை அடைய முடியும். அதெப்படி இயற்கைப் பெயரொலியை ஒத்த அதிருர்ஷ்டப் பெயரை வைத்துக் கொள்வது?

இப்போது பிறப்பில் நமக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கூட முற்றிலும் நமக்கு அன்னியமான ஒலியில்லை. இவ்வாறமைந்த இப்பெயர் ஒலியும் ஓம் இன் பகுதி ஒலியே. ஆனாலும் பிறந்த எண், கூட்டு எண் குறிக்கும் கிரகங்களின் நட்புக் கிரகத்தை உடைய எண் உடைய பெயரா அவ்வொலி எனப் பார்க்க வேண்டும். அப்படிப் பொருத்தமாக இருப்பின் விட்டுவிடலாம்.

இல்லாவிடில், சிறு முயற்சியாக அப்பெயரைக் கொஞ்சம் மாற்றிக் கூடிய வரை நம் இயற்கை ஒலிக்கு மாறாக ஒத்த ஒலி உடைய பெயரை வைத்துக் கொள்ளுவோம்.

இதனால் நோயகலும், செல்வம் சேரும். தொழில் நன்கு நடக்கும். மனம் தெளிவுடன் வேலை செய்யும். புத்தி நன்கு பளிச்சிடும். இவையெல்லாம் பெயர் மாற்றிக் கொண்ட சில நாட்களிலேயே அநுபவமாகக் கண்டால், சரியான இயற்கைப் பெயர் ஒலிக்கு ஏற்ற பெயர் என ஏற்கலாம்.

Leave a Reply