" height="88" />
http://www.dinamani.com/edition/astrology.aspx?starname=scorpio
விருச்சிகம்:
திருப்திகரமான வாரம். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களை சரியாகச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் உதவிகள் கிடைக்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உடல் நலம் சீராகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சி செய்யவும். வேலைகளை தள்ளிப் போட வேண்டாம்.
வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். அதோடு திட்டமிட்ட வேலைகளையும் ஒத்திப்போடவும். பொருட்களை கடனுக்கு விற்பனை செய்வதைத் தவிர்க்கவும்.
விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். இன்னும் முயற்சி செய்து கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும்.
கலைத்துறையினருக்குக் கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவும் தாமதமாகும்.
பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது கலந்து வரும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார்,உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவமணிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வீர தீர விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.
பரிகாரம்: வியாழனன்று குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 22,26
சந்திராஷ்டமம்: இல்லை.