கடோரபாபிக்கு முக்தி கொடுத்தருளிய லீலை! மீனாட்சி சுந்தரேசுவரர் ரிஷப வாகன சேவை!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

மதுரை ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் – மார்கழி அஷ்டமி ப்ரதட்சினம் 2021 !!!

கடோரபாபிக்கு மோக்ஷம் (முக்தி) கொடுத்தருளிய லீலை !!! ரிஷப வாகன சேவை !!!

வருடத்தில் இவ்வொருநாள் மட்டுமே சுவாமி அம்பாள் மதுரை மாநகரின் வெளி (புஷ்ய) வீதிகளில் வலம் வருவர் !!!

அம்பிகை, மாபாதகம் செய்த ஒரு அந்தணனுக்கு முக்தி அளிக்க வேண்டி, தானே ஒரு பசுவேடம் தரித்து மதுரையம்பதியின் ஏழு வீதிகளிலும் வலம் வந்தாள் !!!

இறுதியில் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் சேவை சாதித்து மோக்ஷப் பிராப்த்தி அருளினர்!!!

எனவே ஒருகாலத்தில் இவ்வுற்சவம் சப்தாவரணம் போன்று மதுரையின் ஏழு ப்ராகாரங்களிலும் வலம் வரும் உற்சவமாக அமையப் பெற்றிருந்தது !!!

இன்றும் கூட ஆன்றோர்கள் சிலர் இவ்வுற்சவத்தின் மஹத்துவம் அறிந்து ஏழு வீதிகளிலிலும் வலம் வருதலைக் காணலாம் !!!

கொரோனா தொற்று முடிந்து 9 மாதங்களுக்குப் பின் முதன் முதலாக சுவாமி அம்பாள் திருக்கோவிலை விட்டு வெளிவரும் நாள், புராணத்தின்படி “வீதி ப்ரதட்சினம்” செய்யும் நாளாக அமைவது என்னே ஒரு பொருத்தம் !!!

மீனலோசனி பாசமோசனி !!!

Leave a Reply