https://www.dinamani.com/edition/astrology.aspx?starname=cancer
கடகம்:
பெரிய திருப்பங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் செயல்களை நேர்த்தியாக முடிக்க முயற்சி செய்யுங்கள். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகளும் ஏற்படும். குடும்பத் தலைவரின் உடல் நலத்தில் ஆரோக்யக் குறைபாடுகள் ஏற்படலாம். எவரையும் நம்பிப் பணத்தை ஒப்படைக்க வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்யோகஸ்தர்கள் வார இறுதியில் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் உதவியால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள்.
வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு லாபம் சற்று குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விளைச்சலில் மட்டுமே கவனம் செலுத்தினால் நஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். அவர்களின் கண்களிலிருந்து ஒதுங்கி நின்று செயலாற்றுங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தீர ஆலோசித்த பிறகே புதிய ஒப்பந்தங்களைச் செய்யவும்.
பெண்மணிகள் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
மாணவமணிகள் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை காட்டவும்.
பரிகாரம்: புதன் கிழமையன்று ஸ்ரீராமரை வழிபட்டு நலமடையுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 21,26
சந்திராஷ்டமம்: இல்லை.