11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 11 மாதங்களுக்கு (3 35 நாட்களுக்கு )பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் மயில் வாகனத்தில் மூன்று ரத வீதிகளில் வீதிஉலா வந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த ஆண்டு மாசி மாத கார்த்திகை உற்சவத்திற்காக வெளியில் வந்த சுப்பிரமணிய சுவாமி பின்னர் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 335 நாட்களுக்கு பிறக மாசி மாத கார்த்திகை  உற்சவமான  இன்று  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் மயில் வாகனத்தில் சன்னதி தெரு  மேல ரத வீதி கீழரத வீதி என 3 வீதிகளிலும் வீதி உலா வந்தார். கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு உற்சவர் திருக்கோவிலின் வளாகத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுவாமியை திருக்கோவிலுக்கு வெளியே காண்பதில் பக்தர்கள் உட்பட திருக்கோயிலை சுற்றி உள்ள பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply