2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

 

புத்தாண்டு பலன்கள் – 2011

https://www.dinamani.com/edition/astview.aspx?sid=newyear&ast=10

மகரம் :

நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனத்தை முன்னெப்போதையும் விடச் சரியாக உணர்ந்து கொள்வீர்கள்.​ மற்றவர்களின் உண்மையான மன நிலைகளை உங்களின் உள்ளுணர்வால் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள்.​ அரசு வழியில் சிறப்பான சலுகைகளைப் பெறுவீர்கள்.​ செய்தொழிலில் புதிய சாதனைகளைச் செய்வீர்கள்.​ உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள்,​​ உங்கள் கட்டளைகளை சிரமேற் கொண்டு நிறைவேற்றுவார்கள்.​ உங்களின் போட்டியாளர்களுடன் கலந்தாலோசித்து பொருட்களின் விலையை நிர்ணயிப்பீர்கள்.​ ​ சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் கேது பகவான்,​​ உங்களின் அரசியல் தொடர்பை வலுப்படுத்துவார்.​ இதற்கு குடும்பத்தினரின் ஆதரவையும் பெறுவீர்கள்.​ இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.​ உங்களை வெறுப்பவர்களையும் விரும்ப வைப்பீர்கள்.​ பழைய சொத்துக்களின் மூலம் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

ராகு பகவான்,​​ அவசியமான பணிகளைச் செய்யும் காலத்தில் உங்களுக்குள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவார்.​ அதைப் பொருட்படுத்த வேண்டாம்.​ ஆனால் ​ உங்களின் கௌரவத்திற்கும்,​​ உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது.​ மற்றபடி உங்களின் நண்பர்கள்,​​ தங்களின் தகுதிக்கு மீறி உங்களுக்கு உதவி செய்வார்கள்.

இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தாய் வழியில் நன்மைகள் உண்டாகும்.​ பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.​ புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.​ நன்கு சிந்தித்த பிறகே முக்கியமான விஷயங்களைச் செயல்படுத்துவீர்கள்.​ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.​ நன்மை தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ அயல்நாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயங்களைப் பெறலாம்.

கேது பகவான்,​​ உங்களின் மனதில் சிறிது குழப்பத்தை உண்டாக்குவார்.​ அதனால் சோர்வைப் பொருட்படுத்தாமல் சுயக் கட்டுப்பாட்டுடன் உழைக்க வேண்டியிருக்கும்.​ உஷ்ண சம்பந்தமான உபாதைகளுக்கும் சிலர் ஆளாவீர்கள்.​ உங்கள் மனதில் ஆர்வம் இருந்தாலும்,​​ சில நேரம் ஏதோ கடமைக்காகப் பணி செய்வதைப் போன்ற உணர்வு ​ மேலோங்கும்.​ இதை ‘தியானம்’ பழகி,​​ வெற்றி கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் மீறி,​​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ அனைத்துத் தடைகளையும் தகர்த்துக் காரியங்களில் வெற்றி பெறும் அளவிற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்;​ உயர்ந்த பதவிகளை அளிப்பார்.​ உங்களைத் திறமைசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள்.​ ​

உத்யோகஸ்தர்கள்,​​ இந்த ஆண்டு தங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்வீர்கள்.​ வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள்.​ உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கு எந்தத் தடையும் ஏற்படாது.​ அதேநேரம் ஆண்டின் பிற்பகுதியில் சக ஊழியர்களின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடலாம்.​ எனவே அலுவலகத்தில் எவரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

வியாபாரிகளுக்கு ஆண்டின் பிற்பகுதியில் தொழிலில் சில சிரமங்கள் ஏற்படும்.​ மேலும் கூட்டாளிகளுடன் சிறு மனக் கசப்புகளும் உண்டாகலாம்.​ அதனால் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை எவரிடமும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.​ மற்றபடி வியாபாரத்தைப் பெருக்குவதற்குப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.​ பழைய பாக்கிகளும் வசூலாகி பொருளாதாரம் மேம்படும்.​ ​

விவசாயிகள்,​​ விளைச்சல் நிலங்களில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள்.​ விவசாயக் கூலிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.​ அதேநேரம் சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல்கள் ஏற்படும்.​ இருப்பினும் முடிவு சாதகமாகவே இருக்கும்.​ நன்கு யோசித்து புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.​ நீங்கள் நன்றாகப் பாடுபட்டு உழைக்கும் ஆண்டாக இந்தப் புது வருடம் அமையும்.

அரசியல்வாதிகள் அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெற்றாலும்,​​ கட்சி மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.​ மற்றபடி சமூகத்தில் உங்கள் மதிப்பு,​​ மரியாதை உயரும்.​ இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.​ வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.​ தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

கலைத்துறையினருக்கு சிறு தடைகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும்.​ இந்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.​ சக கலைஞர்கள்கூட உங்களுக்கு உதவமாட்டார்கள்.​ அதோடு திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் திடீரென்று ரத்தாகிவிடும்.​ ஆயினும் பொருளாதாரம் சீராகவே இருக்கும்.

பெண்மணிகள்,​​ மனோ தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும்.​ நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்களின் வலிமையைக் குறைக்கும்.​ குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து சுமுக நிலையை உண்டாக்கவும்.​ வீண் வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.​ பெரியோர்களின் ஆசியும்,​​ கணவரின் ஆதரவும் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குக் கிடைக்கும்.​ பிறகேன் கவலை?​ ​

மாணவமணிகளைப் பொறுத்தவரை படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தவும்.​ பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.​ யோகா மற்றும் ப்ரணாயாமம் போன்றவைகளைச் செய்து மன வளம் மற்றும் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:​ சுயம்பு லிங்கங்களை தரிசிப்பதும்,​​ தியானிப்பதும் எல்லா விதமான கெடு பலன்களையும் தவிடு பொடியாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Leave a Reply