திருமலைக்குமார சுவாமி கோயிலில் 11ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளது பிரசித்தி பெற்ற திருமலைக்குமார சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

முருக பக்தர்களால் 7வது படைவீடு எனப் போற்றி வணங்கப்படும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா, வரும் 11ம் தேதி மலைக்கோயிலில் அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அங்கிருந்து மயில் வாகனத்தில் தைப்பூச திருவிழாவிற்காக மலைக்கோவிலில் இருந்து  சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள பண்பொழி ஊருக்கு திருக்குமரன் மேள தாள, வாண வேடிக்கைகள் முழங்கிட அழைத்துவரப் படுகிறார்.

10 நாட்கள் பண்பொழி நகரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருக்குமரனுக்கு ஒவ்வொரு நாளும் மண்கடப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது. வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு தைப்பூச விழாவிற்கான அன்னக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த வருடம், 12 ஆண்டிற்கு ஒருமுறை வியாழக்கிழமையன்று வரக்கூடிய தைப்பூசம் வருகிறது என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜனவரி 20ம் தேதி தைப்பூச திருவிழாவினை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், அறங்காவலர்கள் காசிதர்மம் துரை, கிளாங்காடு மணி, இடைகால் வேல்சாமி, கணபதிவேல்சாமி, கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ராஜாமணி, கோயில் பணியாளர்கள், தைப்பூச திருவிழா மண்டகப்படிதாரர்கள், முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply