3 923
ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31
3924
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32
3925
அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33
3926
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34
3927
நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35
3928
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36
3929
படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37
3930
ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38
3931
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞசே.மற்று ளார்த்தரமோ?
இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து இராமா னுசன்செய்யும் சேமங்களே. 39
3932
சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40