ஆதிசங்கரர் கல்வி மையம் மூலம் கல்வி பணிகள்: ஸ்ரீ ஜயேந்திரர் தகவல்

செய்திகள்

சங்கரா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறை மூலம் ஆதிசங்கரர் கல்வி மையம் திறப்பு விழா மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது:

இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் 243 பேர் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.÷இதுபோல் பல மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற வேண்டும். மேலும் கல்விப் பணிகளை செய்வதற்காக ஆதிசங்கரர் கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு கல்விப் பணிகள் செய்யப்படும். ஆதிசங்கரர் கொள்கைகளும் பரப்பப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் பி.வி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் சி.வி.வைத்தியநாதன் வரவேற்றார். பதிவாளர் லட்சுமிநாராயணன், டீன்கள் ரமணகுமார், விஷ்ணுபோத்தி, ஜெயலட்சுமி, சமஸ்கிருத துறைத் தலைவர் ஸ்ரீராமுலு, ஆதிசங்கரர் கல்வி மைய இயக்குநர் நாராயணஜிஜே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373619

Leave a Reply