ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

செய்திகள்

இதைத்தொடர்ந்து, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், சிம்ம வாகனம், திருக்கல்யாண உத்சவம், வெண்ணைய் தாழி உத்சவம், தேர் ஆகியவற்றில் பெருமாள் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார்.

பிப். 18-ம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பல்வேறு கோயில்களின் பெருமாள்கள் சங்கமிக்கும் தீர்த்தவாரியில் நித்ய கல்யாணப் பெருமாள் பங்கேற்கிறார். அம்மையார் கோயிலுக்கும், ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலுக்கும் பயன்படக்கூடிய அம்மையார் குளம் புனரமைக்கப்பட்டு, சுமார் 3 0 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் தெப்போத்சவம் நடைபெற்றது. தற்போது சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் தெப்போத்சவம் பிப். 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே. பன்னீர்செல்வம், கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்துள்ளனர்.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373838

Leave a Reply